சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் உரிமை​யாளர்​கள் ரூ.847 கோடி சொத்து வரி நிலுவை

செப்​.30-க்​குள் செலுத்த ஆணை​யர் சமீரன் வேண்​டு​கோள்
சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் உரிமை​யாளர்​கள் ரூ.847 கோடி சொத்து வரி நிலுவை
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்​சி​யில் 6 லட்​சம் சொத்து உரிமை​யாளர்​கள் செலுத்த வேண்​டிய ரூ.847 கோடி சொத்து வரி நிலு​வையை செப்.30-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும் என மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யின் பிர​தான வரி வருவா​யாக சொத்​து ​வரி உள்​ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்​குத் தேவை​யான அடிப்​படை கட்​டமைப்​பு​கள், திடக்கழிவு மேலாண்​மை, தெரு விளக்​கு​கள், பூங்​காக்​கள், சாலைகள் பராமரித்​தல், பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்​புப் பணி​கள் உள்​ளிட்ட பல்​வேறு அத்​தி​யா​வசி​யப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. மாநக​ராட்​சி​யில் சொத்​து​வரி செலுத்​தும் 14,15,771 சொத்து உரிமையாளர்களில் இது​வரை 8,12,539 பேர் நிலு​வை​யின்றி சொத்​து​வரி செலுத்​தி​யுள்​ளனர்.

மீத​முள்ள 6,03,232 பேர் சொத்து வரி நிலுவை மற்​றும் நடப்​புத் தொகை​யாக ரூ. 847.80 கோடி செலுத்த வேண்​டி​யுள்​ளது. தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் சட்​டம் 2023, விதி, 268 (1)(a)-ல் சொத்து உரிமை​யாளர்​கள், ஒவ்​வொரு அரை​யாண்​டுக்​கான தங்​கள் சொத்து வரியை அந்​தந்த அரை​யாண்​டின் இறு​திக்​குள் செலுத்த வேண்​டும். தவறும் பட்​சத்​தில், விதி 3-ன்​படி, நிலு​வை​யில் உள்ள சொத்​து​வரி மீது அடுத்​து​வரும் அரை​யாண்டு முதல் தனிவட்டி விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, சொத்து உரிமை​யாளர்​கள் தாங்​கள் செலுத்து வேண்​டிய நடப்பு மற்​றும் நிலு​வை​யில் உள்ள சொத்து வரியை செப்​.30-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

சொத்து வரியை www.chennaicorporation.gov.in என்ற மாநக​ராட்சி இணை​யதளம், நம்ம சென்னை கைப்​பேசி செயலி, 94451 61913 என்ற வாட்​ஸ்-​அப் எண், சொத்​து​ வரி ரசீதுகளில் உள்ள கியூஆர் கோடு மூல​மாக செலுத்​தலாம். மேலும் வரி வசூலிப்​பாளர்​கள், மாநக​ராட்சி மண்டல அலு​வல​கங்​கள், வார்டு அலுவல​கங்​களில் நேரடி​யாக​வும் செலுத்​தலாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் உரிமை​யாளர்​கள் ரூ.847 கோடி சொத்து வரி நிலுவை
தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in