

சென்னை: தமிழக பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘வருகை யில்லா ஆவணப் பதிவு’ முறையை ஆக.17-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
மனைப்பிரிவில் முதல் விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை ஆகிய 2 ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப் பட்டது. ஆக.17 முதல் செப்.30-ம் தேதிவரை 44 நாட்களிலேயே 1,00,134 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 5 லட்சம் பொதுமக்களின் கால விரையம், தேவையற்ற செலவு குறைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து படிப்படியாக பிற ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.