ஆதிதிராவிடர் நலத் துறையை சமூக நீதித் துறை என மாற்றி அரசாணை வெளியீடு

ஆதிதிராவிடர் நலத் துறையை சமூக நீதித் துறை என மாற்றி அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பெயரை சமூக நீதித் துறை என மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. இத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், பழங்குடியினர் நல இயக்குநரகம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

தற்போது இத்துறையின் அமைச்சராக வன்னி அரசு, செயலராக டாக்டர் என்.சுப்பையன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையானது சமூ நீதித் துறை என அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெயர் மாற்றத்துக்கான அரசாணையை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலத் துறையை சமூக நீதித் துறை என மாற்றி அரசாணை வெளியீடு
“அமோனியா கசிவு ஆலைக்கு செல்லாத அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளியில் அத்துமீறலாமா?” - சீமான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in