தனியார் பள்ளிகள் அங்கீகாரம் ஊழல் வழக்கு: ஓட்டுநர் சரவணனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் ஊழல் வழக்கு: ஓட்டுநர் சரவணனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
Updated on: 
1 min read

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பி.டி.அரசக்குமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், அவருடைய கார் ஓட்டுநர் சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6வது நபராக சேர்க்கப்பட்டுள்ள சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். சரவணன் தலைமறைவாக உள்ளதால் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல் துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த சரவணன் கடந்த 11-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து, சரவணனை நவம்பர் 25-ம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சரவணனை ஐந்து நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்திய மூர்த்தி, சரவணனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு பின்னர் சரவணனை விசாரணைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்ட நீதிபதி விசாரணை முடிந்து நாளை ஐந்து மணிக்கு அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் ஊழல் வழக்கு: ஓட்டுநர் சரவணனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு - சிஎஸ்கே ஆலோசகராக நியமனம்

X