கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on
1 min read

கல்பாக்கம்: கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, மாற்ற நிலையை அடைந்துள்ளதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி, மேற்கண்ட புதிய அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தோரியத்திலிருந்து, நியூட்ரான் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது படிப்படியாக முன்னேறி மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியா தனது அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து, தனது அணுசக்தி பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளது. கல்பாக்கத்தில், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக அணு உலை நிலை மாற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த மேம்பட்ட அணு உலை, தனது அறிவியல் திறனின் ஆழத்தையும், நமது பொறியியல் முயற்சியின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், நமது பரந்த தோரியும் இருப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தீர்க்கமான படியாகும். இந்தியாவுக்கு, இதுபெருமைக்குரிய தருணம். நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி</p></div>
தமிழக தேர்தல் 2026: ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in