‘விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் கட்சியினர் நெருக்கடி’ - போராட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறையினர் முடிவு

 கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சிவகங்கை: விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் அரசியல் கட்சியினர் நெருக்கடி கொடுப்பதாக புகார் கூறும் ஊரக வளர்ச்சித் துறையினர், இது தொடர்பாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகக் கட்டிடம், பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகள் அந்தந்த ஊராட்சி செயலர்கள் பெயரில் ஒதுக்கப்பட்டன. மேலும், அவர்கள் விரும்பிய ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நடப்பாண்டில் இத்திட்டத்தில் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை ஒன்றியத்துக்கு ரூ.11 கோடி, காளையார்கோவில் ஒன்றித்துக்கு ரூ.3..73 கோடி, கல்லல் ஒன்றியத்துக்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்க வேண்டுமென ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சி செயலர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், எதிர்க்கட்சியினரும் தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

சில இடங்களில் வேலை உத்தரவு பெறாமலேயே பணியை தொடங்கிவிட்டு, தங்களுக்கு பணியை ஒதுக்க வேண்டுமென சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். மேலும், முறைப்படி பணிகளை தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் அரசியல் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஊராட்சி செயலர் பெயரில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

இதில் முறைகேடு நடந்தால் அவர்கள் தான் சிக்கிக் கொள்வர். அதனால் தான் பணியை முறையாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கே இப்பணிகளை வழங்குகின்றனர். இதில் தற்போது அரசியல் கட்சியினர் தலையிட்டு அதிகாரிகளுக்கும், ஊராட்சி செயலர்களுக்கும் நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p> கோப்புப் படம்</p></div>
“தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதி” - துரை வைகோ

X