ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: ப்​ரீமி​யம் பெட்​ரோல் (பவர்) விலை லிட்​டருக்கு ரூ.2 உயர்த்​தப்​படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலை​யில் மாற்றம் இல்லை.

ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் தடை ஏற்​பட்​டது. இதனால், சர்​வ​தேச சந்தை​யில் கச்சா எண்​ணெய் விலை பீப்​பாய் ஒன்​றுக்கு 110 அமெரிக்க டாலரை தாண்டியது. பல நாடு​களிலும் பெட்ரோல் விலை உயர்ந்​தது.

இந்​நிலை​யில் எச்​பிசிஎல் நிறு​வனம் நேற்று வெளியிட்ட செய்​தி​யில், ‘கச்சா எண்​ணெய் விநி​யோகத்​தில் தடை ஏதும் ஏற்​பட​வில்​லை. கூடு​தல் சரக்கு கப்​பல்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. இது இந்​தி​யா​வின் எரிபொருள் விநி​யோகத்தை வலுப்​படுத்தும். எனவே, வதந்திகளை தவிர்க்​க​வும். ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை மட்​டும் லிட்​டருக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சாதாரண பெட்ரோல் விலை​யில் மாற்​றம் இல்லை’ என்று தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்து, டெல்​லியில் ஒரு லிட்​டர் ப்ரீமி​யம் பெட்ரோல் ரூ.101.89, மும்பையில் ரூ.113.77-க்கு விற்கப்​படு​கிறது. இதேபோல, பிபிசிஎல் ஸ்பீடு, ஐஓசிஎல் எக்ஸ்பி95 ஆகிய ப்ரீமியம் பெட்ரோல் விலையும் சராசரியாக ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
புதுச்சேரியில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது: என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in