திருவள்ளூரில் ஆசிட் ஊற்றி பெண்ணை கொன்றவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

திருவள்ளூரில் ஆசிட் ஊற்றி பெண்ணை கொன்றவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று வீட்​டு வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித்​துறை, சிறப்பு முயற்​சிகள் துறை (சென்னை மெட்ரோ ரயில் திட்​டம்) மானியக்​கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் தேமு​திக உறுப்​பினர் பிரேமலதா விஜய​காந்த் பேசி​ய​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை அருகே தொட்​டாரெட்​டிக்​குப்​பம் கிராமத்​தில் பெண் ஒரு​வர் ஆசிட் ஊற்றி படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஒரு பெண் என்ற முறை​யில் இந்த சம்​பவத்தை பேர​வை​யில் பதிவுசெய்​கிறேன். இந்த கொடுமைக்கு யார் காரணமோ அவர்​களுக்கு அரசு கடும் தண்​டனை பெற்​றுத்தர வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​கிறேன்.

விருத்​தாசலம் கோயில் தெப்​பக்​குளத்​துக்கு செல்​லும் நீர்ப்​பாதைகள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ளன. அவற்றை அகற்றி நீர் செல்​லும் பாதையை சரிசெய்ய வேண்​டும்.

விருத்​தாசலத்​தில் பொதுப்​பணித்​துறை, நீர்ப்​பாசனத்​துறை, தீயணைப்​புத் துறை அலு​வலக வளாகத்​திலேயே போது​மான இடவசதி இருப்​ப​தால் அங்​கேயே ஊழியர்​களுக்குப் புதிய குடி​யிருப்பு வசதி​கள் ஏற்​படுத்தி தர வேண்​டும்.

விருத்​தாசலம் பகு​தி​யில் பட்டா, மின் இணைப்பு பெற்று வீடு கட்டி 30 ஆண்​டு​களாக வசித்​து​வரும் மக்​களை நீர்​நிலை ஆக்​கிரமிப்பு என்று சொல்லி அவர்​களை அப்​புறப்​படுத்த முயற்சி நடை​பெறுகிறது.

பட்​டா​வும் கொடுத்து மின் இணைப்​பும் தந்து அதன்​பிறகு திடீரென மக்​களை அப்​புறப்​படுத்​தி​னால் அவர்​களின் வாழ்க்கை மிகப்​பெரிய கேள்விக்​குறி​யாகி​விடும். இதை அரசு கவனத்​தில்​கொள்ள வேண்​டும் என்றார்.

திருவள்ளூரில் ஆசிட் ஊற்றி பெண்ணை கொன்றவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in