“போட்டோ ஷுட் செய்வோரையே மக்கள் நம்புகிறார்கள்” - பிரேமலதா விஜயகாந்த் வேதனை

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.

Updated on: 
1 min read

கடலூர்: தேமுதிக பொதுச் செயலாள ரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு சீருடை, ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

தொடர்ந்து அவர் விருத்தாசலம் அடுத்த எம்.அகரம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சின்னபரூர், மு.அகரத்தில் மழையில் நெல்மூட்டைகள் நனைந்ததை அறிந்து நேரில் ஆய்வு செய்தேன். தற்போது கொள்முதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது மனுக்கள் வந்து குவிகின்றன. மக்களுக்கு அவ்வளவு தேவைகள் இருக்கிறது. நாங்கள் களத்தில் இருக்கிறோம். ஆனால் ஆளும்கட்சி களத்திற்கு வராமல் உட்கார்ந்த இடத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட் டைக்கு பத்து ரூபாய் என்பது போதாது. மூட்டைக்கு வெறும்பத்து ரூபாய் வாங்கி அவர்கள் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? கூலித்தொழிலாளர்களுக்கு தேவையான கூலித்தொகையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசின் கவனம் வேறு எங்கேயோ இருக்கிறது. இடைத்தேர்தல் வேறு வந்துவிட்டது. தேவையில்லாமல் ராஜி னாமா செய்து, இவர்களாகவே ஒரு இடைத்தேர்தலை கொண்டு வந்து விட்டார்கள்.

நேர விரயம், பண விரயம் தான் மிச்சம். லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சி என்கிறார்கள். ஆனால் மறைமுகமாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஏமாற்றுகிறவர்கள், பொய் சொல்கிறவர்கள், நாடகம் நடிக்கிறவர்களுக்குத்தான் மக்கள் ஓட்டு போடுகிறார்கள்.

உழைக்கிறவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதை செய்யாமல் யார், யாருக்கோ ஓட்டை மாற்றிப்போட்டுவிட்டு குத்துது, குடையுது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? யார் மக்களுக்காக பேசுகிறார்கள், ரீல்ஸ் போடுபவர்கள், போட்டோ ஷுட் செய்கிறவர் களைத்தான் மக்கள் நம்புகிறார்கள்.

கூலித்தொழிலாளர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். இதனை கவனிக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் அரசு எதையும் செய்வதில்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை. மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

யார் மக்களுக்காக உழைக்கிறார் களோ அவர்களுக்கு துணை நில்லுங்கள். அப்போதுதான் உண்மையான மாற்றம் வரும், அப்போதுதான் தமிழ்நாடு வல்லரசாக மாறும் என்றார்.

<div class="paragraphs"><p>விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.</p></div>
மதுரை மாநகராட்சி லஞ்ச விவகாரம்: பொறியியல் பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in