இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் பெரும்​பாலான இடங்​களில் மக்​களுக்கு பட்​டாக்​கள் வழங்​கப்​பட​வில்​லை.

அதை துறை​சார்ந்த அமைச்​சரின் கவனத்​துக்கு கொண்டு சென்று உள்​ளோம். விஜய​காந்த் பிறந்த நாளில் தமிழகம் முழு​வதும் பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களுக்கு கட்​டில், மெத்​தை, டிவி, மருத்​துவ உபகரணங்​கள் வாங்கி கொடுத்​தது ஒரு வரலாறு.

இதை எல்​லாம் கேப்​டனை தவிர வேறு யாரும் செய்​தது இல்​லை. விருத்​தாசலம் அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்​துவ உபகரணங்​கள், மருத்​து​வர் -செவிலியர்​கள் பற்​றாக்​குறையை நீக்க வேண்​டும்.

தவெக அரசு 100 நாள்​களைக் கடந்​துள்​ளது. மாற்​றம் மாற்​றம் என்​றார்​கள். ஆனால் எந்த மாற்​ற​மும் நிகழ​வில்​லை. கடந்த 4 நாள்​களில் 10-க்​கும் மேற்​பட்ட கொலைகள், பாலியல் வன்​கொடுமை​கள் நடந்​துள்​ளன.

இதற்கு கஞ்சா உள்​ளிட்ட போதைப்​பொருள்​கள் புழக்​கம் மற்​றும் கலாச்​சார சீரழிவே காரணம்.இளைஞர்​கள் ஓட்​டு​போட்டு இந்த ஆட்​சி​யைக் கொண்டு வந்​துள்​ளனர்.

ஆனால், இன்​றைக்கு இளைஞர்​களின் எதிர்காலம் கேள்விக்​குறி​யாக இருக்​கிறது. இதை எல்​லாம் கவனத்​தில் கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்​சினையை இரும்​புக்​கரம் கொண்டு அடக்​கவேண்​டும்.

கர்​நாட​கா​வில் 3 தமிழர்​களை வனத்​துறை​யினர் கொலை செய்​தது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்
வீடுகளில் அதிக மின் கட்டண புகார்: 3.7 லட்சம் மின் இணைப்பில் 2 ஆயிரத்தில் மட்டுமே குளறுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in