தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை

ஊட்டி அருகே தோடரின மக்களின் வசிப்பிடமான முத்தநாடு மந்தில் உள்ள கோயிலில் வழிபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

ஊட்டி அருகே தோடரின மக்களின் வசிப்பிடமான முத்தநாடு மந்தில் உள்ள கோயிலில் வழிபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

Updated on
1 min read

ஊட்டி: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேமுதிக இடம் பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் கூறி​னார்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் நடை​பெற்ற தேமு​திக பொதுக் கூட்​டத்​தில் கலந்து கொள்​வதற்​காக நேற்று முன்​தினம் வந்த பிரேமலதா விஜய​காந்த், தேயிலைத் தோட்​டங்​களுக்​குச் சென்று தொழிலா​ளர்​களு​டன் இணைந்து தேயிலை பறித்​தார்.

நேற்று ஊட்​டிக்கு வந்த அவர் அங்​குள்ள சாக்​லேட் தொழிற்​சாலைக்​குச் சென்​று, சாக்​லேட் தயாரிக்​கும் பணி​களை பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, முத்​த​நாடுமந்து தோடர் கிராமத்​துக்​குச் சென்​று, தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயிலைப் பார்​வை​யிட்​டார்.

பசுந்தேயிலைக்கு விலை... பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பசுந் தேயிலைக்கு சரி​யான விலை கிடைக்​காத​தால் நீல​கிரி மாவட்ட விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தப் பிரச்​சினைக்கு மத்​திய, மாநில அரசுகள் உரிய தீர்​வு​காண வேண்​டும். நீல​கிரி​யில் பலருக்​கும் பட்டா இல்​லை. பல இடங்​களில் சாலைகள் குண்​டும், குழி​யு​மாக உள்​ளன.

ஊட்​டி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் நில​வு​கிறது. லட்​சக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் நீல​கிரிக்கு வரு​வ​தால் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்​தகம் நடை​பெறுகிறது. எனவே, சுற்​றுலாவை மேம்​படுத்​தத் தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக மக்​கள் அரசி​யல் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார்​கள். அந்த தேர்​தலில் தேமு​திக இடம்​பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும். விஜய​காந்த் அளவுக்​கு, அரசி​யலில் விஜய் பிர​காசிப்​பாரா என்​பது குறித்து இப்​போது கூற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ஊட்டி அருகே தோடரின மக்களின் வசிப்பிடமான முத்தநாடு மந்தில் உள்ள கோயிலில் வழிபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.</p></div>
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in