

பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: திமுக வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்றும் அக்.1-ம் தேதியும் பிரச்சாரம் செய்கிறார்.
இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்யவுள்ளார். அதன் படி இன்று (செப்.28) மதுராந்தகத்தில் மாலை 5 மணிக்கு நெல்வாய்கூட்டு ரோட்டிலும், 6 மணிக்கு எண்டத்தூரிலும் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, இரவு 7 மணிக்கு எலப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதையடுத்து அக்.1-ம் தேதி தாராபுரத்தில் மாலை 5 மணிக்கு மூலனூர் கிழக்கு ஒன்றியம் - நால்ரோடு (கருப்பன் வலசு) பகுதியிலும், 6 மணிக்கு கொளத்துப்பாளையம், கரையூரிலும் பிரச்சாரம் செய்கிறார். இரவு 7.30 மணிக்கு தாராபுரம் மேற்கு ஒன்றியம் அலங்கியம் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.