டெல்டாவை பார்வையிட கர்நாடக முதல்வரை கையோடு தமிழகம் அழைத்து வருக: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: கர்​நாடகா செல்​லும் தமிழக முதல்​வர் விஜய், டெல்​டா​வில் வறண்டு கிடக்​கும் பாசன பகு​தி​களை பார்​வை​யிட அந்த மாநில முதல்​வர் டி.கே.சிவகு​மாரை​ கையோடு அழைத்து வர வேண்​டும் என தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: காவிரி​யில் தண்​ணீர் வராத​தால், டெல்​டா​வில் 12 லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் பாலை​வன​மாக காட்​சி​யளிக்​கின்​றன. தமிழகத்​துக்கு 3,500 கன அடி வீதம் 15 தினங்​களுக்கு காவிரி​யில் தண்​ணீர் விடுவிக்க வேண்​டும் என கர்​நாடகா​வுக்கு காவிரி மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டும், இது​வரை ஒரு சொட்டு தண்​ணீர் கூட கர்​நாடகம் விடுவிக்​க​வில்​லை.

காவிரி மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டும், கர்​நாடக அரசு தண்​ணீரை திறக்க மறுத்​தால், மத்​திய அரசிடம் முறை​யிட்​டு, தண்​ணீரை திறக்​கலாம் என காவிரி நடு​வர் மன்​ற​ம், உச்ச நீதி​மன்​ற​ தீர்ப்​பிலும் தெளி​வாக உள்​ளது. அதன்​படி, காவிரி மேலாண்மை ஆணை​யம், மத்​திய அரசு உதவி​யுடன்கர்​நாடகத்​திடம் இருந்து காவிரி நீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

காவிரி நடு​வர் மன்ற இறுதி தீர்ப்பை உச்ச நீதி​மன்​றம் ஏற்​றுக்​கொண்​டு, மத்​திய அரசிதழில் வெளி​யிட்ட பிறகு எந்தப் பேச்​சு​வார்த்​தைக்​கும் இடமில்​லை. காவிரி மேலாண்மை ஆணை​யம் மட்​டுமே முடி​வெடுக்க முடி​யும். முதல்​வர் விஜய் கர்​நாடகா​வுக்கு வரும் போது, காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களை பார்​வை​யிட ஹெலி​காப்​டர் ஏற்​பாடு செய்​துள்​ளோம் என அந்த மாநில முதல்​வர் சிவகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

அப்​படி என்​றால், கர்​நாடகம் சென்று விட்​டு, முதல்​வர் விஜய் திரும்​பும்​போது, கர்​நாடக முதல்​வர் சிவகு​மாரை​யும் கையோடு அழைத்து வந்து காவிரி டெல்​டா​வில் வறண்டு கிடக்​கும் பாசன பகு​தி​களை பார்​வை​யிட நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். எனவே, எந்த சூழ்​நிலை​யிலும் காவிரி குறித்துக் கர்​நாடகா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதை ஏற்க மாட்​டோம் என்​றார்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன். </p></div>
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in