தமிழகத்தில் 25 முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 25 முதல் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 25-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், 26, 27-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் டிச.24 வரை வறண்ட வானிலை நிலவும் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். இன்று முதல் 25-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in