தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றுடன் வறண்ட வானிலை முடிந்​து, நாளை (ஜன. 23) மற்​றும் நாளை மறு​நாள் கடலோரப் பகு​தி​களி​லும், வரும் 25 முதல் 27 வரை சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். அதி​காலை நேரத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான பனி மூட்​டம் காணப்​படும். உள் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நீல​கிரி, கொடைக்​கானல் மலைப் பகு​தி​களில் இன்று ஓரிரு இடங்​களில் உறைபனி ஏற்பட வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் ஜன. 21-ம் தேதி (நேற்​று) காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் தரு​மபுரி​யில் 16.5 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வாகி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
இரங்கல் தீர்மானம், மவுன அஞ்சலியுடன் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in