

பொன்ராஜ்
விஜய் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக காவல் ஆணையரிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றிய பொன்ராஜ் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றியவர் பொன்ராஜ. இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பதிவிடும் சில வீடியோக்கள் குறித்து பொன்ராஜ் விமர்சனம் செய்திருந்தார்.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு தவெக நிர்வாகிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தவெக தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார்.
அதே நேரத்தில், தவெக கட்சியினர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் பொன்ராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ”விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சியின் பெண் உறுப்பினர்கள் சிலர் வெளியிடும் வீடியோக்கள், தமிழகத்தின் பண்பாட்டுக்கு எதிராக இருக்கிறது. குடும்ப மதிப்புகளைச் சிதைக்கிறது.
மவுனம் காக்கிறார்: நடிகர் விஜய் தனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், இத் தகைய வன்முறை மற்றும் அநாகரீகச் செயல்களை மறை முகமாக ஊக்குவிக்கிறார். இத்தகைய மோசமான கலாச்சா ரத்தை பரப்பும் நடிகர் விஜய் யின் சில ரசிகர்களையே நான் கண்டித்தேன். அனைத்து பெண்களையும் அல்ல.
இந்நிலையில், ஆதவ அர் ஜுனா நடத்தும் கால சென்டர் மூலம் வெளிப்படையாக எனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வருகிறது. கடந்த 24 மணி நேரத் தில் மட்டும் எனக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது. தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வாட்ஸ்- அப், தொலைபேசி வாயிலாக ஆபாச வசவுகளும், கொலை மிரட்டல்களும் விடுத்து வருகின்றனர். எனது குடும்பத்தினரை ஆபாசமாகச் சித்தரித்து, எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
எனவே, எனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மிரட்டல் விடுத்த நபர்கள் மற்றும் அதற்குப் பின்னால் இருக் கும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.