

சென்னை: சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிப்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு சென்னை சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக பெண் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் பொன்முடியை விடுவித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய திமுக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது.
இந்நிலையில் அவருக்கு எதிராக பாஜக பெண் கவுன்சிலரான உமா ஆனந்தன், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பின்னர் ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரி்க்கும் சிறப்பு நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது பேச்சுக்காக பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி விட்டதாலும், அவரது வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக’ பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்தார். அதையேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து உத்தரவிட்டார்.