ரூ.3,000 ரொக்கத்துடன் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

சென்னையில் முதல்​வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்​கிறார்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள 2.23 கோடி குடும்​பங்​களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​புடன் ரூ.3 ஆயிரம் ரொக்​கம் வழங்​கும் திட்​டத்தை முதல்வர் ஸ்​டாலின் நாளை ஆலந்​தூரில் தொடங்கி வைக்​கிறார்.

பொங்​கல் பண்​டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்​டாடும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் பொங்​கல் பரிசுத் தொகுப்பு ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்டு வரு​கிறது. கடந்​தாண்டு பொங்​கல் பரிசுத் தொகுப்​பில் ரொக்​கப்​பணம் வழங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், கடந்த டிச.31-ம் தேதி தமிழகத்​தில் உள்ள 2 கோடியே 22 லட்​சத்து 91,730 அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​கள் மற்றும் இலங்​கைத் தமிழர் குடும்​பங்​களுக்​கு, பொங்​கல் பரிசுத் தொகுப்​பில் ஒரு கிலோ பச்​சரிசி, ஒரு கிலோ சர்க்​கரை மற்​றும் ஒரு முழு கரும்பு வழங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.248 கோடியே 66 லட்​சத்து 17,959 ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​தது.

இதையடுத்​து, தற்​போது நியாய​விலைக் கடைகளுக்கு அரிசி, சர்க்​கரை ஆகிய பொருட்​கள் ஏற்​கெனவே அனுப்​பப்பட்​டுள்​ளன. கரும்பு கொள்​முதல் பணியும் தொடங்​கி​யுள்​ளது. விரை​வில் கரும்​பும் கடைகளுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளது. இதற்​கிடை​யில், சில தினங்​களுக்கு முன்​ன​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​கள், இலங்​கைத் தமிழர் குடும்​பங்​களுக்கு பொங்​கல் ரொக்​கப் பரி​சாக ரூ.3000 வழங்​கப்​படும் என்று அறி​வித்​தார்.

அந்த வகை​யில் பொங்​கல் பரிசுத் தொகுப்பு மற்​றும் ரொக்​கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்​சத்து 47,959 கோடி செல​வில் வழங்​கப்​படு​வ​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, நேற்று முன்தினம் பொங்​கல் பரிசுத் தொகுப்பு பெறும் குடும்​பங்​களுக்கு அந்​தந்த நியாய​விலைக் கடைப் பணி​யாளர்​கள் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வநியோகத்தைத் தொடங்​கினர். இப்​பணியை இன்​றைக்​குள் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்து நாளை சென்னை ஆலந்​தூர் பகு​திக்​குட்​பட்ட பட்​ரோடு, நசரத்​புரம் நியாய​விலைக் கடை​யில் நடை​பெறும் விழா​வில், பொங்​கல் தொகுப்பு வழங்​கும் பணியை முதல்​வர்மு.க.ஸ்​டா​லி்ன்​ தொடங்கி வைக்கிறார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in