தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் திருப்தி: தேர்தல் ஆணையக் குழு தகவல்

ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள்,  காவல் துறை  உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையக்குழு அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையக்குழு அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக மாவட்ட தேர்​தல் அதி​காரிகளான ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தேர்​தல் ஆணை​யக்​குழு நேற்று ஆய்​வு மேற்கொண்டது.

தமிழகம் உட்பட ​பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்​தல்​களுக்​கான ஏற்​பாடு​களை ஆய்வு செய்​வதற்காக இந்​ திய தேர்​தல் ஆணை​யத்​தின் முது​நிலை துணைத்தேர்​தல் ஆணை​யர்​கள் மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா மற்​றும் துணை தேர்​தல் ஆணை​யர்​கள் சஞ்​சய் குமார், பானு பிர​காஷ் யெத்​துரு, தலைமை இயக்​குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் உள்​ளிட்​டோர் அடங்​கிய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்து ஆணை​யத்​துக்கு அறிக்​கை​ அளிக்கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக இக்​குழுதமிழகத்​தில் ஆய்வு மேற்​கொள்​வதற்​காக கடந்த பிப்​.11-ம் தேதிசென்னை வந்​தது. மாநிலத் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் முன்​னிலை​யில், மத்​திய அரசு துறை அதி​காரி​களு​டன், தேர்​தலை வெளிப்​படை தன்​மை​யுடன் நடத்த எடுத்​துள்ள நடவடிக்​கைகள் குறித்​தும், அதற்கு தேவை​யான அலு​வலர்​கள், வாக​னங்​கள் போது​மான அளவில் உள்​ளதா என்பது குறஇத்தும் ஆய்வு செய்​தனர்.

தொடர்ந்​து, அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் (ஆட்​சி​யர்​கள்) மற்​றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்றது. இதில் அந்​தந்த மாவட்​டங்களில் இறுதி வாக்காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்​கைகள், எத்​தனை வாக்​குச்​சாவடிகள் மறு​வரையறை செய்​யப்​பட்​டுள்​ளன, பதட்​ட​மான வாக்​குச்​சாவடிகள் எத்​தனை, தேவை​யான துணை ராணுவப்​படை எண்​ணிக்கை உள்​ளிட்​டவை குறித்து தேர்​தல் ஆணைய குழு கேட்​டறிந்​தது. அதன் தொடர்ச்​சி​யாக, உரிமம் பெற்ற துப்​பாக்கிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், தேவையான அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அம்​சங்​கள் ஆய்வு செய்யப்​பட்​டன.

சென்​னை​யில் இரு நாட்​களில் மேற்​கொண்ட ஆய்வு விவரங்​களை தேர்​தல் ஆணை​யக்​குழு, தலை​மைத் தேர்​தல் ஆணை​யரிடம் விரை​வில் சமர்ப்​பிக்க உள்​ளது. இதனடிப்​படை​யில் விரை​வில் தமிழகத்​தில் தேர்​தல் தேதி அறிவிக்​கப்பட உள்​ளது. தமிழகத்​தில் முன்​னேற்​பாடு​கள் திருப்தி அளிப்​ப​தாக தேர்​தல் ஆணை​ய குழு​​ தெரி​வித்​த​தாக தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

26-ல் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை: தேர்தல் ஆணையக்குழு சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தியநிலையில் அது குறித்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையரிடம் அளிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் பிப்.25-ம் தேதி புதுச்சேரிக்கும், பிப்.26-ம் தேதி சென்னைக்கும் தலைமை தேர்தல் அதிகாரி கியானேஷ் குமார் வரவுள்ளார். இதன்படி தமிழக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசிக்கிறார். அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

<div class="paragraphs"><p>தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள்,  காவல் துறை  உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையக்குழு அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.</p></div>
“தமிழ் சினிமா இந்தியாவுக்கே டிரெண்ட்செட்டர்” - உதயநிதி புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in