பாடநூல்களை தாண்டி பொதுவான புத்தகங்களையும் படியுங்கள்: அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிவுரை

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் புத்தக காட்சி
படங்கள்: எஸ்.சத்தியசீலன்.

படங்கள்: எஸ்.சத்தியசீலன்.

Updated on
2 min read

சென்னை: பாடநூல்களை தாண்டி பொது​வான புத்​தகங்​களை​யும் படிக்க வேண்​டும் என்று கல்​லூரி மாணவி​களுக்கு அரசி​ய​லா​ளர் கே.எஸ்​.​ரா​தாகிருஷ்ணன் அறி​வுரை வழங்​கி​னார்.

இந்​தி​யா​வின் 80-வது சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை” பதிப்​பகம் சார்​பில் சென்னை அடை​யார் டாக்​டர் எம்​ஜிஆர் - ஜானகி மகளிர் கலை அறி​வியல் கல்​லூரி​யில் 3 நாள் வாசிப்​புத் திரு​விழா மற்​றும் புத்தக காட்சி நேற்று தொடங்​கியது.

இந்​நிகழ்ச்​சியை அரசி​ய​லா​ளர் கே.எஸ்​.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​துப் பேசி​ய​தாவது: தற்​போது நிறைய பேர் வாசிப்​பதே இல்​லை.

நான் தின​மும் தமிழ், ஆங்​கிலம் என 12 பத்​திரி​கைகள் படிக்​கிறேன். இவ்​வளவு படித்​தால்​தான் எனக்கு ஒரு​நாள் திருப்​தி​யான நாளாக இருக்​கும்.

கல்​லூரி மாணவர்​கள் வகுப்பு முடிந்து மாலை​யில் தின​மும் ஒரு மணி நேரம் படிக்​கலாம். பத்​திரி​கைகளை படித்​துப் படித்​து​தான் எனக்கு அரசி​யல் ஆர்​வம் வந்​தது. படிக்​கும்​போது​தான் அதன் சுவை​யும், பெரு​மை​யும் நமக்கு தெரி​யும்.

மாணவர்​கள் பாடப்​புத்​தகங்​களை தாண்டி பொதுப் புத்​தகங்​களை​யும் படிக்க வேண்​டும். புத்தக வாசிப்பு மிக​வும் முக்​கி​யம்.

ஆழ்ந்த வாசிப்​பு​தான் மனிதனை மனித​னாக்​கும். வாசிப்​பி​னால் நல்ல பண்​பு​கள் வளரும். வாசிப்பு கூர்ந்​து நோக்​கும் ஆற்​றலை​யும், விசால​மான பார்​வையை​யும் தரும். ஆழ்ந்த வாசிப்​புடன் மனதில் பதிந்த கருத்​துகள் மீது ஆய்வு நடத்த வேண்​டும். அப்​போது, வாசிப்பு ஆரோக்​கிய​மான மனநிலையை தரும்.

அண்​ணா, ராஜாஜி, கருணாநிதி, எம்​ஜிஆர் தொடர்​பான புத்​தகங்​களை படித்​தால் ஒட்​டுமொத்த தமிழக அரசி​யலை​யும் அறிந்​து​கொள்​ளலாம். மாணவர்​கள் வரலாற்று தலை​வர்​கள், தமிழக வரலாறு, பொருளா​தா​ரம், நாட்​டின் வளர்ச்​சித் திட்​டங்​கள், நதி நீர் பிரச்​சினை என அனைத்து விஷ​யங்​களை​யும் தெரிந்​து​கொள்ள வேண்​டும்.

தின​மும் நாளிதழ்​களில் வெளி​யாகும் நடுப்​பக்க கட்​டுரைகளை​யும், தலை​யங்​கங்​களை​யும் அவசி​யம் படிக்க வேண்​டும். வாசிப்பு என்​பது ஆன்​மாவுக்கு முக்​கி​யம். வாசிப்பு தைரி​யத்தை கொடுக்​கும். அது நம்மை ஒரு​முகப்​படுத்​தும். வாசிப்பு ஒவ்​வொரு​வருக்​கும் அவசி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

கல்​லூரி​யின் தலை​வர் குமார் ராஜேந்​திரன் தலைமை வகித்​துப் பேசுகை​யில், “சிறு வயது முதல் புத்தக வாசிப்பு மீது மிகுந்த ஆர்​வம் கொண்​ட​வன் நான். எனது தந்தை நிறைய புத்​தகங்​கள் வாங்​கி் கொடுப்​பார்.

எங்​கள் வீட்​டிலேயே பெரிய நூல​கம் இருந்​தது. அதில் இருந்த என்​சைக்​ளோபீடி​யாவை படித்​து​தான் எனக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்​வம் வந்​தது. பள்​ளி​யில் படிக்​கும் காலத்​திலேயே சனி, ஞாயிறு விடு​முறை நாட்​களில் எழும்​பூரில் உள்ள கன்​னி​மாரா நூல​கத்​துக்கு சென்​று​விடு​வேன்.

மாலை​யில் நூல​கம் மூடப்​படும்​வரை அங்கே உட்​கார்ந்து புத்​தகங்​கள் வாசிப்​பேன். அதே​போல் கிளை நூல​கங்​களுக்​கு்ம் செல்​வேன். புத்​தகங்​கள் படிக்க படிக்க எனது ஆங்​கிலத்​திறன் நன்கு வளர்ந்​தது. பாடப்​புத்​தகங்​களை தாண்டி பொது​வான புத்​தகங்​களை​யும்

வாசித்​தால் பொது அறிவு வளரும். மாணவர்​கள் தங்​கள் திறமையை வளர்க்க வேண்​டு​மா​னால் நூல​கங்​களுக்கு செல்ல வேண்​டும். பலதரப்​பட்ட புத்​தகங்​களை வாசிக்க வேண்டும்” என்​றார்.

முன்​ன​தாக, ‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகத்​தின் பொறுப்​பாசிரியர் வி.தேவ​தாசன் வரவேற்​றுப் பேசி​னார். தொடக்க விழா​வில், தமிழ்த்​துறை உள்பட பல்​வேறு துறை​களைச் சேர்ந்த மாணவி​கள், பேராசிரியைகள் கலந்​து​கொண்​டனர். இந்த புத்தக காட்சி நாளை (புதன்​கிழமை) முடிவடைகிறது.

<div class="paragraphs"><p>படங்கள்: எஸ்.சத்தியசீலன்.</p></div>
நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டு திட்டம்: விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in