

இலைக் கட்சி தலைவி காலத்தில் ‘தோட்டத்து’ மேஜைக்கு உண்மையான நாட்டு நடப்புகள் முழுமையாகப் போய்ச் சேராது என்பார்கள்.
எந்தச் செய்தியெல்லாம் அம்மாவின் கவனத்துக்குப் போயாக வேண்டுமோ அதை மட்டும் ‘கட்’ செய்து மேஜைக்கு அனுப்பிவிடுவாராம் அப்போது தோட்ட விசுவாசியாக இருந்த ‘குன்றமானவர்’.
புதிதாக அரசியல் அரிதாரம் பூசி இருக்கும் பனையூர் தலைவருக்கும் இதே பாணியை பழக்கப்படுத்திவிட்டார்களாம்.
அவருக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் அழகாக கத்தரி போட்டுச் சொல்லிவிட்டு மற்ற சமாச்சாரங்களை சாமர்த்தியமாக மறைத்துவிடுகிறாராம் கட்சியில் இருக்கும் ‘ஹெல்த் கடவுள்’.
இந்த சூட்சுமம் தெரியாமல், இது தான் நிஜமான நாட்டு நடப்பு போலிருக்கிறது என்று அப்படியே நம்பிப் போகும் பனையூர் தலைவர், தனது பெயரில் வெளியாகும் அறிக்கைகளையும் ‘நீங்களே பாத்து பண்ணிக்கோங்க’ என்று ஹெல்த் கடவுளுக்கு முழுமையான ரைட்ஸ் கொடுத்திருப்பதால் புகுந்து விளையாடுகிறாராம் மிஸ்டர் ‘ஹெல்த்’.
அது மாத்திரமல்லாது, தலைவரின் நிகழ்ச்சிகள் தொடர்பாக ‘லைவ்’ கொடுக்கும் விஷயத்திலும் மிஸ்டர் ஹெல்த் கொடுக்கும் ‘லவ் டார்ச்சரை’ தாங்க முடியாமல் 3 தமிழ் செய்திச் சேனல்கள் டர்ராகிக் கிடக்கின்றனவாம்.