‘கோல்டு மதர்’ பெண்மணி களம் இறங்கினால்..? | உள்குத்து உளவாளி

‘கோல்டு மதர்’ பெண்மணி களம் இறங்கினால்..? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

நமக்கு சீட் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பதை விட எதிர்முகாமில் யாரை நிறுத்தப் போகிறார்கள் என்று அறிந்து கொள்வதில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் ‘தனியாக’ ஒரு சர்வே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் சில பல அதிரடிகள் அரங்கேறிய அந்த ஆன்மிக தொகுதியில் கடந்த முறை இலைக் கட்சி வெற்றி பெற்றது.

அந்த சமயத்தில் எதிர்முகாமில் கூட்டணிக் கட்சியின் ‘கோல்டு மதர்’ பெண்மணி களத்தில் நின்றார். அவருக்காக சொந்தக் கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகித்த கட்சியும் களப்பணிக்கு கரன்சிகளைக் கொடுத்து உதவின. இது அவர் துடிப்பாக தேர்தல் பணி செய்வதற்காக.

அதேசமயம், ‘கோல்டு மதர்’ பெண்மணியை வேலை செய்யாமல் முடக்கிவைப்பதற்காக இலைக் கட்சி வேட்பாளரும் தனிப்பட்ட முறையில் 5 ‘சி’-யை அந்தப் பெண்மணியின் கட்சியைச் சேர்ந்த ‘விவரமான’ புள்ளியிடம் கொடுத்தாராம். அதில் நான்கு பங்கை தனக்காக ‘சுட்டுக்’ கொண்டு ஒரு பங்கை மட்டும் ‘மதருக்கு’ கொடுத்தாராம் ‘விவரப்’ புள்ளி. அந்த ஒன்றில் பாதிக்கு ஒரு பிளாட்டும் மீதிக்கு ஒரு இன்வெஸ்ட்மென்டும் பண்ணிவைத்துவிட்டாராம் பக்கா ‘கோல்டு மதர்’.

இந்த நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடத் தயாராகும் இலைக் கட்சி எம்எல்ஏ, எதிர்முகாமின் ‘விவரப்’ புள்ளியை தொடர்பு கொண்டு, “என்னப்பா... இந்தவாட்டி என்ன முடிவுல இருக்கீங்க?” என்று விசாரித்தாராம். பதிலுக்கு ‘விவரப்’ புள்ளி, ”இந்தவாட்டியும் ‘கோல்டு மதரையே’ நிப்பாட்டிட்டா போச்சுண்ணே” என்று சொல்லிச் சிரித்தாராம். இந்த வாட்டி யாருக்கு எத்தனை ‘சி’ யோ?

‘கோல்டு மதர்’ பெண்மணி களம் இறங்கினால்..? | உள்குத்து உளவாளி
‘கங்கை’ மாவட்டத்தில் கதர் கட்சி திட்டம் என்ன? | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in