‘பல்பு’ வாங்கிய கதர் கட்சியின் சீமைப் பிரதிநிதி | உள்குத்து உளவாளி

‘பல்பு’ வாங்கிய கதர் கட்சியின் சீமைப் பிரதிநிதி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘கருத்துச் சொல்லலாம் வாங்க’ என கட்சியினரை கரிசனத்துடன் தலைநகருக்கு அழைத்திருந்தது கதர் கட்சி. அதுசமயம், மக்கள் பிரதிநிதிகளிடம் தனித்தனியே கருத்துக் கேட்டாராம் இளம் தலைவர். ‘சீமை’ மாவட்டத்திலிருந்து ‘சிறப்பான’ ஏற்பாட்டுடன் போயிருந்த மக்கள் பிரநிதி ஒருவர். “சூரியக் கட்சியுடன் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு” என்று தன்னை உருவாக்கிவிட்ட தலைவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தாராம்.

அவரை கிராஸ் செக் செய்த இளம் தலைவர், “அப்படியா... உங்க அசெம்ளி தொகுதியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் எத்தனை பேர் நம்மவர்கள் இருக்கிறார்கள்?” என்று கேட்க, பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாராம் பிரதிநிதி. “உள்ளாட்சி தேர்தலில் சூரியக் கட்சி நமக்கு உரிய பங்கை தருவதில்லை என்ற வருத்தம் இருக்கிறதே” என்று இளம் தலைவர் கேட்ட அடுத்த கேள்விக்கு, “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வெச்சு ஜெயிச்சுட்டு, உள்ளாட்சி தேர்தலில் நம்ம தனித்துப் போட்டியிட்டுக்கலாம் தலைவரே” என்று சொன்னாராம் பிரதிநிதி.

இந்த பதிலை எதிர்பார்க்காத இளம் தலைவர், “கூட்டணி வெச்சு ஜெயிச்சுட்டு, உள்ளாட்சி தேர்தல்ல அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப் போட்டியிடுவதன் மூலமா கூட்டணி கட்சிக்கு மட்டுமில்லாம உள்ளாட்சியில நம்மவர்கள் ஜெயிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி காங்கிரஸாருக்கும் துரோகம் பண்ண நினைக்கிறீங்களே சார்...” என்று கேட்க, சீமைப் பிரதிநிதிக்கு முகத்தில் ஈ ஆடவில்லையாம். இந்த சம்பாஷணைகளை மொழியாக்கம் செய்த பிரகஸ்பதி தற்போது இந்த விஷயத்தை தனக்குத் தெரிந்த நபர்களுக்கெல்லாம் போன்போட்டுச் சொல்லி தம்பட்டம் அடிக்கிறாராம்.

‘பல்பு’ வாங்கிய கதர் கட்சியின் சீமைப் பிரதிநிதி | உள்குத்து உளவாளி
தூங்கா நகர அண்ணனின் கைவிரிப்பு | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in