சூரியக் கட்சி பக்கமும் வலைவீசும் விசில் கிங்டம் | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சி பக்கமும் வலைவீசும் விசில் கிங்டம் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

இதுவரை இலைக் கட்சி ஆட்களை மட்டுமே ஆள்வைத்து தூக்கி வந்த விசில் கிங்டம் விஐபி-க்கள், அடுத்ததாக சூரியக் கட்சி பக்கமும் இப்போது சூனிய வலை வீசுகிறார்களாம். சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மூத்த முன்னோடி குடும்பத்தின் மீது அந்தப் பார்வை திரும்பி இருக்கிறதாம். சட்டமன்றத் தேர்தலில் மூத்த முன்னோடிக்கே சீட் இருக்காது என பேச்சு சுற்றியது.

ஆனாலும் “இந்த ஒருமுறை வாய்ப்புக் கொடுங்கள்” என அவர் கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டதால் அதை தட்டமுடியாமல் அவருக்கு சீட் கொடுத்தது தலைமை. இந்த நிலையில், மூத்த முன்னோடிக்கு ஜெயில் மாவட்டத்தில் அனைத்துமாக இருக்கும் அவரது தம்பியை குறி வைத்திருக் கிறதாம் விசில் கிங்டம்.

உங்க அண்ணனுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. ஆனா, யாரை வேண்டுமானாலும் கட்டம் கட்டும் இடத்தில் இருக்கிற அவரால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல. பேசாம நம்ம பக்கம் வந்திருங்க. எங்கக்கிட்ட வேக்கன்சி நிறைய இருக்கு. உள்ளாட்சி வேற வருது. ‘ரட்சகர்’ மகன் எங்க பக்கம் வந்துட்டாரு. அஞ்சா நெஞ்சரோட மகளே நம்ம பக்கம்தான் நிக்கிறாங்க. அதனால ரொம்ப யோசிக்காதீங்க” என்று ப்ரைன் வாஷ் செய்திருக்கிறார்களாம்.

எனினும், “எதுவா இருந்தாலும் இடைத் தேர்தல் முடியட்டும் பேசிக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே ‘சிங்காரமாய்’ சொல்லி அவர்களை சரிக்கட்டி வைத்திருக்கிறாராம் மூத்த முன்னோடியின் தம்பி. இதே போல் பக்கத்தில் உள்ள ‘பேட்டை’ மாவட்டத்தில் அகிம்சை தலைவரின் பெயர் கொண்ட முன்னாள் மாண்புமிகுவின் வினோத வாரிசையும் மண்டையைக் கழுவத் தயாராகிறதாம் விசில் முகாம்.

சூரியக் கட்சி பக்கமும் வலைவீசும் விசில் கிங்டம் | உள்குத்து உளவாளி
தூங்கா நகரின் ‘குப்பை’ அரசியல் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in