பூட்டு மாவட்ட ஆளும் கட்சியினரை அலற​வைக்கும் ஆடியோ | உள்குத்து உளவாளி

பூட்டு மாவட்ட ஆளும் கட்சியினரை அலற​வைக்கும் ஆடியோ | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

பூட்டு மாவட்​டத்​தின் ‘சத்​திரம்’ தொகு​தியை மீண்​டும் தக்​க​வைத்த சூரியக் கட்​சி​யின் ‘சுகர்’ வேட்​பாளரை எதிர்த்து விசில் ஊதி​ய​வர் மோக​ன​மான வேட்​பாளர். அவர் பேசி​ய​தாக வெளி​யாகி இருக்​கும் மிரட்​டல் ஆடியோ ஒன்று அம்​மாவட்ட ஆளும் கட்​சி​யினரை அலற​வைத்​துக் கொண்​டிருக்​கிறது.

சுமார் 5 நிமிடங்​கள் ஓடும் அந்த ஆடியோ​வில், நகரச் செய​லா​ளர், மாவட்​டச் செய​லா​ளர் சம்​பந்​தப்​பட்ட 40 கசமுசா வீடியோக்​கள் தன்​வசம் இருப்​ப​தாக தடதடக்​கிறார் மோக​னப் புள்​ளி. யார் யாரெல்​லாம் வீடியோ​வில் களி​யாட்​டம் போட்​டிருக்​கிறார்​கள் என பெயர்​களை​யும் பட்​டியல் போட்​டிருக்​கிறார். இதுதவிர, ‘சத்​திரம்’ தொகுதி சம்​பந்​தப்​பட்ட ஃபைல்ஸ் தனி​யாக இருப்​ப​தாக​வும் ட்ரைலர் ஓட்​டு​கிறார்.

“சூரியக் கட்​சி​யின் ‘சுகர்’ வேட்​பாளரை எதிர்த்து நிற்​பது தற்​கொலைக்​குச் சமம் என்று தெரிந்​தும் நான் நின்​றேன். ஆனால், வெற்றி பெற்​றிருக்க வேண்​டிய என்​னை, சூரியக் கட்​சி​யினருடன் சேர்ந்து கொண்டு யார் தோற்​கடித்​தது என்று தெரி​யும். அவர்​களைப் பற்​றிய வீடியோ என்​னிடம் உள்​ளது, ‘தெரி​யாமல் நடந்​து​விட்​டது’ என்று என்​னிடம் வந்து மன்​னிப்​புக் கேட்​டால் விட்​டு​விடு​வேன்.

இல்​லா​விட்​டால், தினம் ஒரு வீடியோ​வாக இங்​கே​யும் தலை​மைக்​கு​மாக ரிலீஸாகிக் கொண்டே இருக்​கும். கட்​சி​யின் பெயர் கெட்​டுப் போவதை என்​னால் அனு​ம​திக்க முடி​யாது” என்று மோக​னப் புள்ளி பேசி இருக்​கும் செல்​போன் உரை​யாடல் இப்​போது மாவட்​டம் முழுக்​க வைரலாகி வருகிறது.

பூட்டு மாவட்ட ஆளும் கட்சியினரை அலற​வைக்கும் ஆடியோ | உள்குத்து உளவாளி
மதுராந்தகத்தில் பழக்கட்சி​யினர் மறைமுக ஆதரவு யாருக்கு? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in