

பவள விழாக் கட்சியில் சின்னவருக்கும், வந்த சாருக்கும் விரிசல் பெரிதாகிக் கொண்டே போகிறதாம். விசில் பார்ட்டியின் வளர்ந்த மாண்புமிகு, பேரவையில் தலைமைக் குடும்பத்தை வம்புக்கு இழுத்து வைரலாகிக் கொண்டே இருக்கிறார்.
ஆனால், அவருடன் சார் தரப்பினர் இன்னமும் நெருக்கமாக இருக்கிறார்களாம். ஏற்கெனவே இது விஷயமாக மாமனுக்கும், மச்சானுக்கும் மனத்தாங்கல் வந்தபோது குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டு சமாதானம் செய்தார்களாம். இந்த நிலையில், மீண்டும் இப்போது இந்த விவகாரத்தில் சின்னவர் சிடுசிடுக்கிறாராம்.
ஆனால், “நமக்கு தொழில் துறைகளும் இருக்கு. முக்கியமான சில விஷயங்களை சிக்கலின்றி கொண்டு செல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருந்தாக வேண்டும்” என்று சொன்ன சார், அரண்மனைக் கோழிகளுக்கு வேண்டப்பட்ட அக்கட தேசத்து ஆட்களுடன் மச்சானுக்கு இருக்கும் நெருக்கத்தை கோடிட்டுக் காட்டி, “அப்படித்தான் இதுவும்” என்று நியாயம் கற்பித்தாராம்.