‘மகிழ்ச்​சி’ Vs ‘மாப்பிள்ளை’ - விசில் நிர்வாகத்தில் அதிகாரப் போட்டி உச்சம் | உள்குத்து உளவாளி

‘மகிழ்ச்​சி’ Vs ‘மாப்பிள்ளை’ - விசில் நிர்வாகத்தில் அதிகாரப் போட்டி உச்சம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

விசில் நிர்​வாகத்​தில் முதன்​மை​யானவருக்கு முக்​கிய ஆலோசனை​களைச் சொல்​லும் அண்டை மாநிலத்து ஆலோசகர்கள் இரு​வர் ‘மகிழ்ச்​சி’ மற்​றும் ‘மாப்​பிள்​ளை’ மாண்புமிகுக்களுக்கு இடையி​லான அதி​காரப் போட்டி நாளுக்கு நாள் உச்​சமடைந்து வரு​கிற​தாம். பேர​வைக் கூட்​டம் முடிந்​ததும் மந்​திரிப் பிர​தானிகள் சிலரை மாற்​றி​விடும் யோசனை​யில் இருக்கிறா​ராம் விசில் தலை​வர். அதற்​காக மாண்​புமிகுக்​களின் செயல்​பாடு​கள் குறித்து மதிப்​பீடு​கள் தயா​ராகி வரு​கிற​தாம்.

ஆனால் அதி​கார லாபி​யில் இருக்​கும் அந்த நால்​வரும், ‘அவைக்குள்’ தங்​களது பலத்தை தக்​க​வைத்​துக் கொள்​வதற்​காக ஒரு​வருக்கு எதி​ராக மற்​றவர்​கள் அஞ்​சாம்​படை வேலைகளைச் செய்து ஆட்​களைச் சாய்க்​கும் வேலைகளைச் செய்து வருகிறார்களாம்.

ஏற்​கெனவே, “எங்​களை எல்​லாம் கைவிட்​டுட்டு இன்​னிக்கு வந்​தவங்கள எல்​லாம் கூட்டி கூட வெச்​சிக்​கிறீங்க” என்று மன்​றத்​துப் பிள்​ளை​கள் குறைபட்டு வரு​வ​தால் ‘அவை’ மாற்​றம் இருந்​தால் அவர்​களில் சிலரை உள்ளே இழுத்​துப்​போட மெனக்​கிடு​கிறா​ராம் ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு. அதற்கு மாற்​றாக மற்ற மூவரும் தங்​களின் அடிப்​பொடிகளை உள்ளே கொண்​டுவர தனித் தனி டிராக்​கில் ஸ்கெட்ச் போடு​கிறார்​களாம்.

இப்​போ​திருக்​கும் ‘அவை​யில்’ கிட்​டத்​தட்ட 17 பேர் ‘மகிழ்ச்​சி’​யின் சிபாரிசில் வந்​தவர்​களாம். எக்​காரணம் கொண்​டும் அந்த எண்​ணிக்கை குறைந்​து​விடக் கூடாது என்​ப​தில் கவன​மாகவே இருக்​கிறா​ராம் அவர். இதனிடையே முதன்​மை​யானவரின் ‘கழிப்​பு’ ஆக் ஷனை அரசல் புரசலாக அறிந்​தவர்​கள், இந்த நேரத்​தில் தங்​களைப் பற்றி சோஷியல் மீடி​யா​வில் ஏடாகூட​மாக எது​வும் வந்​து​விடக் கூடாதே என இஷ்ட தெய்​வங்​களை வேண்​டிக்​கொண்​டு இருக்​கிறார்​களாம்​.

‘மகிழ்ச்​சி’ Vs ‘மாப்பிள்ளை’ - விசில் நிர்வாகத்தில் அதிகாரப் போட்டி உச்சம் | உள்குத்து உளவாளி
‘மலர்ச்சி’ தலைவரின் ‘மிரட்டல்’ பாணி | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in