விசில் கட்சியில் ஐக்கியம் ஆகிறது ‘க்​ரீன் மால்’ டீம்? | உள்குத்து உளவாளி

விசில் கட்சியில் ஐக்கியம் ஆகிறது  ‘க்​ரீன் மால்’ டீம்? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘தென்​கோடி மாவட்​டத்​தைச் சேர்ந்த இலைக் கட்​சி​யின் இன்​னொரு முன்​னாள் மாண்​புமிகு இன்று அல்​லது நாளை விசில் கட்​சிக்கு வீடு​மாறலாம் என்​கிறார்​கள். ‘அம்​மா’ காலத்​தில் ‘கானக’ துறைக்கு மாண்​புமிகு​வாக இருந்த அந்த ‘க்​ரீன் மால்’ பிர​முகரை 2016-க்​குப் பிறகு அரசி​யலில் தலை​யெடுக்க விடா​மலே வைத்​திருந்​தது உள்ளூர் உள்​ளடி அரசி​யல்.

அப்​படி​யும் கொள்கை மாறாக் குன்​றாக இருந்​தவர் இந்​தத் தேர்தலில், ‘...ச்​சல்’ தொகுதி தனக்கு கிடைக்​கும் என்று பெரிதும் எதிர்​பார்த்​தார். எடக்​கானவரும், “தொகுதி உங்​களுக்​குத்​தான்” என்று உத்​தர​வாதம் அளித்​திருந்​தா​ராம். இதை நம்பி கடந்த ஒரு வருட கால​மாக தொகு​திக்​குள் தேர்​தலை எதிர்​நோக்கி சில பல வேலைகளைச் செய்து வைத்​திருந்​தா​ராம் மிஸ்​டர் ‘க்​ரீன்’.

ஆனால், கடைசி நேரத்​தில் தொகு​தியை மலர்க் கட்​சிக்கு மனமுவந்து கொடுத்​து​விட்​ட​தாம் இலைக்​கட்சி தலை​மை. இதனால் பெரும் வருத்​தத்​தில் உழன்று கொண்​டிருந்த மிஸ்​டர் ‘க்ரீன்’ தனது ஆதர​வாளர்​கள் 15 பேரைக் கூட்​டிக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி விட்​டா​ராம்.

தற்​போது சென்​னை​யில் முகாமிட்​டிருக்​கும் ‘க்​ரீன் மால்’ டீம் இன்று அல்​லது நாளை ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு முன்​னிலை​யில் விசில் கட்​சி​யில் கலக்​கும் திட்​டத்​தில் இருக்​கிற​தாம். முதல்​கட்​டமாக 15 பேரை திரட்​டிக் கொண்டு வந்​திருந்​தா​லும் அடுத்​தகட்​ட​மாக இன்​னும் பலரை இட்​டுக்​கினு வரு​வ​தாக ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​வுக்கு உத்​தர​வாதம்​ அளித்​திருக்​கிறார்​களாம்​.

விசில் கட்சியில் ஐக்கியம் ஆகிறது  ‘க்​ரீன் மால்’ டீம்? | உள்குத்து உளவாளி
பனையூர் பிரவேசத்தால் ’தேற்றி’க் கொண்டவரின் கதை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in