இலைக் கட்சி வேட்பாளர்கள் பட்ட ‘சிரமம்’ | உள்குத்து உளவாளி

இலைக் கட்சி வேட்பாளர்கள் பட்ட ‘சிரமம்’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சி வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கும் முன்பே, “10 ‘சி’ -யை கண்ணில் காட்டு” என்று நிபந்தனை விதித்தார்களாம். வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தலைமையிலிருந்து கூடுதலாக 15 ‘சி’ வரும் என்று உத்தரவாதமும் அளித்திருந்தார்களாம்.

ஆனால், பல தொகுதிகளுக்கு தலைமையிலிருந்து அந்தத் தொகை வந்து சேரவில்லையாம். இதனால் இலைக் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ‘பட்டுவாடா’ பஞ்சாயத்தை முடிக்க முடியாமல் ரொம்பவே திணறிப் போனார்களாம்.

இலைக் கட்சி ஆட்சியில் ‘ஆரோக்கியமான’ துறையை அலங்கரித்தவரும் ‘சாப்பாட்டுத்’ துறையில் சாதித்துக் கொண்டவரும் தேர்தல் செலவுக்காக தலா 200 ‘சி’ தருவதாக தலைமைக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார்களாம்.

ஆனால் கடைசி நேரத்தில், “பணம் புரட்ட முடியவில்லை” என்று சொல்லி இருவருமே சொல்லிவைத்தாற் போல் கைவிரித்து விட்டார்களாம். அதனால் வேட்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டுப் போனதாம் இலைக் கட்சித் தலைமை.

இலைக் கட்சி வேட்பாளர்கள் பட்ட ‘சிரமம்’ | உள்குத்து உளவாளி
‘நாடு’ தொகுதியில் நடந்த ‘கவனிப்பு’ சம்பவம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in