டச்சிங்காக பேசி வாக்குச் சேகரிக்கும் சூரியக் கட்சியின் முத்த தலைவர் | உள்குத்து உளவாளி

டச்சிங்காக பேசி வாக்குச் சேகரிக்கும் சூரியக் கட்சியின் முத்த தலைவர் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“இந்தியாவிலேயே ஒரே தொகுதியில் இத்தனை முறை ஜெயித்த ஒரே தலைவர் என்ற சாதனையை நிகழ்த்த இம்முறை என்னை நீங்கள் என்னை ஜெயிக்க வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்” என்று பொதுவெளியில் டச்சிங்காக பேசி வாக்குச் சேகரித்து வரும் சூரியக் கட்சியின் முத்த தலைவர், அந்த சாதனையை சாத்தியப்படுத்த இம்முறை கட்சிக்காரர்களையும் தாராளமாகவே ‘கவனிக்க’ ஆரம்பித்திருக்கிறாராம்.

கடந்த முறை மூன்று இலக்கத்தில் தட்டுத் தடுமாறி வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்தவர், இம்முறை அப்படி இல்லாமல் தனது வெற்றி ‘அமர்க்கள வெற்றியாக’ இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். கடந்த முறை நகர் பகுதி வாக்குகள் தான் காலை வாரிவிட்டதாம்.

இம்முறையும் அப்படித்தான் இருக்கும் என கணித்திருக்கும் தலைவர், தன்னால் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட வேலுடன் கூடிய ‘வெயிட்டான’ முருகனாரை அழைத்துப் பேசினாராம். இதையடுத்து பஞ்சாயத்துத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என ஒருவரையும் விடாமல் மண்டபத்துக்கு அழைத்துக் கூட்டம் போட்ட முருகனார், வந்தவர்கள் எல்லாம் வாழ்த்திவிட்டுப் போகுமளவுக்கு கவனித்து அனுப்பினாராம்.

அப்போது அவர்கள் மத்தியில் பேசிய தலைவர், “அடுத்த எலெக்ஷனுக்கு நான் இருப்பேனா இல்லையான்னு தெரியாது. அதனால, போன முறை மாதிரி என்னைய கெஞ்ச விட்டுடாதீங்க. எல்லாரும் ஒற்றுமையா இருந்து என்னைய ஜெயிக்க வெச்சிருங்க” என்று உருகினாராம். ‘கதிரான’ அவரது புதல்வரோ, “இந்த முறை ஜெயிச்சு வந்ததும் அடுத்த அஞ்சு வருசத்துல நம்ம தொகுதிக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுருவோம். நம்ம ஆட்சி வருதோ இல்லையோ... ஆனா, இது கண்டிப்பா நடக்கும்” என்று அடித்துச் சொன்னாராம்.

டச்சிங்காக பேசி வாக்குச் சேகரிக்கும் சூரியக் கட்சியின் முத்த தலைவர் | உள்குத்து உளவாளி
‘மவுன்ட்’ தலைவரை தாஜா செய்யும் மிஸ்டர் ‘மணி’ | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in