

‘டர்னிங்’ ஊர் மாவட்டத்தின் தலைநகர் தொகுதியின் சூரியக் கட்சி சிட்டிங் எம்எல்ஏ-வான, ‘குட் பிரதர்’ மீது கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். தம்பி அதிகாரக் கட்சிக்கு எம்எல்ஏ-வாக இருக்கும் போது அவரது ‘அருணை’ அண்ணன் சாதியின் பெயரால் அங்கே தனியாக கட்சி தொடங்கி குடைச்சல் கொடுக்கிறாராம்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டிய மாவட்டத்தின் ‘முருகாயுத’ பெயர் கொண்ட பொறுப்பு அமைச்சர், ”இந்த முறை உங்களுக்கு சீட் இருக்காதுன்னு தலைமையில சொல்றாங்க. அதனால, யாருக்கு சீட் கொடுத்தாலும் அவங்களுக்காக வேலை பார்த்து ஜெயிக்க வைங்க” என்று கண்டிஷனாகச் சொல்லி விட்டாராம்.
கட்சியின் முதன்மையானவர் வருகைகளின் போது பத்திரிகைகளில் பக்க அளவில் விளம்பரங்களைக் கொடுத்து கலக்கிக் கொண்டிருந்த ‘குட் பிரதர்’ எம்எல்ஏ தனக்கு சீட் இல்லை என்ற செய்தி பரவ ஆரம்பித்தது முதலே, விளம்பரங்களின் அளவை கால் பக்க அளவுக்கு சுருக்க ஆரம்பித்துவிட்டாராம்.
இருந்த போதும், பத்தாண்டுகள் வகித்த பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் கடைசி முயற்சியாக சென்னையில் டேரா போட்டு ’முருகாயுத’ அமைச்சரிடம் சீட்டுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறாராம் ‘குட் பிரதர்’.