திருச்சியில் கடந்த ஆண்டு மாயமான இளைஞரை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் சென்னையில் மீட்ட போலீஸார்

திருச்சியில் கடந்த ஆண்டு மாயமான இளைஞரை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் சென்னையில் மீட்ட போலீஸார்
Updated on
2 min read

சென்னை: திருச்சியில் காணா​மல் போன இளைஞரை முக அடை​யாள தொழில்​நுட்​பம் மூலம் போலீ​ஸார் சென்னை மெரி​னா​வில் மீட்​டுள்​ளனர்.

அண்ணா சதுக்​கம் காவல் நிலைய தலை​மைக் காவலர் சரவணன், முதல்​நிலைக் காவலர் நாகேந்​திரன் ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை மெரினா கடற்​கரை உழைப்​பாளர் சிலை அருகே பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அந்த வழி​யாக சென்ற இளைஞர் ஒரு​வரை சந்​தேகத்​தின் பேரில் விசா​ரித்​தனர். போலீ​ஸாரின் கேள்விகளுக்கு அவர் சரி​யாக பதில் அளிக்​காமல் அங்​கிருந்து சென்​றார்.

இதையடுத்​து, அவரை காவல்​துறை​யின் எப்​ஆர்​எஸ் எனப்​படும் முக அடை​யாளத் தொழில்​நுட்​பம் (Face Recognition System) மூலம் சோதனை செய்​தனர்.

இதில், அவர் திருச்​சி​யைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என்​பதும், கடந்த ஆண்டு திருச்சி அரசு மருத்​து​வ​மனை காவல் நிலை​யத்​தில் பதி​வான ‘ஆண் காண​வில்​லை’ வழக்​கில் தொடர்​புடைய​வர் என்​பதும் தெரிய​வந்​தது.

மேலும், அவர் சற்று மன நலம் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், திருச்சி கீழ​வயலூர் பகு​தி​யில் செயல்​படும் தனி​யார் காப்​பகத்​தில் தங்கி இருந்​துள்​ளார். அங்​கிருந்து கடந்த 1.11.2025 அன்று திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக காப்பக ஊழியருடன் சென்​ற​போது மாய​மானது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்து திருச்சி அரசு மருத்​து​வ​மனை காவல் நிலை​யத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதற்​கிடை​யில், அவர் சென்​னை​யில் உள்ள ‘கருணை உள்​ளங்​கள்’ அமைப்​பினரிடம் பாது​காப்​பாக ஒப்​படைக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் (25-ம் தேதி) திருச்சி அரசு மருத்​து​வ​மனை காவல் நிலைய போலீ​ஸாரிடம் அவர் முறைப்​படி ஒப்​படைக்​கப்​பட்​டார்.

எப்​ஆர்​எஸ் தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி காணா​மல் போனவரை விரைந்து கண்​டு​ பிடிக்க உதவிய தலை​மைக் காவலர் சரவணன், முதல் நிலைக் காவலர் நாகேந்​திரன் ஆகியோரை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உள்​ளிட்ட போலீஸ் அதி​காரி​கள் வெகு​வாக பாராட்​டினர்.

மெரினாவில் சிறுவன் மீட்பு

சென்னை மெரினா கடற்​கரை​யில் போலீ​ஸார் கடந்த 25-ம் தேதி கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒரு சிறு​வன் அவர்​களிடம் வந்து வாய்​பேச முடி​யாதது​போல சைகை காட்​டி, பணம் கேட்​டார்.

போலீ​ஸார் சந்​தேகம் அடைந்து விசா​ரணை நடத்​தி​ய​தில், சிறு​வன் தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளத்தை சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு மாணவன் என்​பது தெரிய​வந்​தது.

பெற்​றோரிடம் கோபித்​துக்​கொண்டு வீட்​டை​விட்டு வெளி​யேறிய சிறு​வன், உண்​டியலில் சேமித்த பணத்தை எடுத்​துக்​கொண்டு ரயில் மூலம் முதலில் திருச்​சிக்​கும், அங்​கிருந்து சென்​னைக்​கும் வந்​துள்​ளார்.

சென்​னை​யில் சுற்​றித் திரிந்த நிலை​யில், கையில் இருந்த பணம் தீர்ந்​து​விட்​ட​தால் வாய்​பேச முடி​யாதவர் போல நடித்து மக்​களிடம் பணம் கேட்டு வந்​துள்​ளார் என்​றும் தெரிந்​தது. இதையடுத்​து, தென்​காசி மாவட்ட போலீ​ஸாரிடம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, பெற்​றோரிடம் சிறு​வன் பத்​திர​மாக ஒப்​படைக்​கப்​பட்​டார்​.

எப்​ஆர்​எஸ் என்​றால் என்ன?

எப்​ஆர்​எஸ் (Face Recognition System) என்​பது ஒரு​வரின் முகத்தை கேமரா மூலம் பதிவு செய்​து, காவல்​துறை​யின் தரவுத்​தளத்​தில் ஏற்​கெனவே உள்ள புகைப்​படங்​களு​டன் ஒப்​பிட்டு அந்த நபரின் அடை​யாளத்தை கண்​டறிய உதவும் தொழில்​நுட்​ப​மாகும்.

குறிப்​பாக காணா​மல் போனவர்​கள், தேடப்​படும் நபர்​கள் மற்​றும் அடை​யாளம் தெரி​யாதவர்​களை கண்​டு​பிடிப்​ப​தில் இந்​த தொழில்​நுட்​பம்​ காவல்​துறைக்​கு மிக உதவி​யாக உள்​ளது.

திருச்சியில் கடந்த ஆண்டு மாயமான இளைஞரை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் சென்னையில் மீட்ட போலீஸார்
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற மாணிக்கம் தாகூர் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in