பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட்

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட்
Updated on
1 min read

தேவகோட்டை: தேவகோட்​டை​யில் பாலியல் தொல்​லை​யால் பாதிக்​கப்​பட்ட பெண்​ணிடம் புகாரை வாங்​காமல் அலைக்​கழித்​த​தாக 2 ஆய்​வாளர்​கள் உட்பட 5 போலீ​ஸார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

சிவகங்கை மாவட்​டம், தேவகோட்டை பகு​தி​யைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், மே 19-ம் தேதி ஆட்​டோ​வில் சென்​றார். அப்போது ஓட்​டுநர் மாதவன் (48) என்பவர் அந்த பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்​ததாக தெரிகிறது. இதையடுத்​து, அந்தப் பெண் தேவகோட்டை நகர் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுக்​கச் சென்​றார்.

ஆனால், புகாரை வாங்க மறுத்த போலீஸார் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்துக்குச் செல்​லும்​படி திருப்பி அனுப்​பினர். இதையடுத்​து, மகளிர் காவல் நிலை​யம் சென்ற அப்பெண்ணை அங்கிருந்த போலீஸார் மீண்டும் நகர் காவல் நிலை​யத்​துக்கே அனுப்பினர். இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட பெண் தரப்​பினர், தென்​மண்டல ஐஜி விஜயேந்​திர பிதா​ரி​யிடம் புகார் தெரி​வித்​தனர். ஐஜி உத்​தர​வின்​பேரில், தேவகோட்டை நகர் போலீ​ஸார் வழக்கு பதிந்து காரைக்​குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் மாதவனை கைது செய்​தனர்.

மேலும், புகார் கொடுக்​கச் சென்ற பெண்ணை அலைக்​கழித்​த​தாக தேவகோட்டை நகர் காவல் ஆய்​வாளர் துரை​ராஜ், அனைத்து மகளிர் காவல் ஆய்​வாளர் சீதாலெட்​சுமி, சிறப்பு சார்​பு- ஆய்​வாளர்​கள் ஜெயா, ராஜேஸ்​வரி மற்​றும் மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​துக்கு தகவல் சொல்​லாமல் மறைத்த தனிப்​பிரிவு காவலர் சந்​தானம் ஆகிய 5 பேரை பணி​யிடை நீக்​கம்​ செய்​து ஐஜி உத்​தர​விட்​டார்​.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட்
மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in