உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த காவல்துறை மற்​றும் வழக்​கறிஞர்​கள் இடையே மோதல் சம்​பவம் தொடர்​பான வழக்​கு​களை ரத்து செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

கடந்த 2009-ம் ஆண்​டு, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு வந்த ஜனதா கட்​சித் தலை​வர் சுப்​பிரமணி​யன் சுவாமி மீது வழக்​கறிஞர்​கள் சிலர் தாக்​குதல் நடத்த முயற்​சித்​தனர். இந்த வழக்​கில், தொடர்​புடைய வழக்​கறிஞர்​களைக் கைது செய்​த​போது, காவல்​துறை​யினருக்​கும், வழக்​கறிஞர்​களுக்​கும் இடையே ஏற்​பட்ட மோதல், கலவர​மாக வெடித்​தது.

கடந்த 2009-ம் ஆண்​டு, பிப்​.19-ம் தேதி நடந்த இந்த மோதலில் வழக்​கறிஞர்​கள், நீதிப​தி​கள், செய்​தி​யாளர்​கள் தாக்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது.

இந்​நிலை​யில், எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி, வழக்​கறிஞர் ரஜினி​காந்த் உள்​ளிட்ட 28 வழக்​கறிஞர்​களும், 4 காவல்​துறை அதி​காரி​களும், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் நீதிபதி நிர்​மல்​கு​மார் முன்பு கடந்த ஏப்​ரல் மாதம் விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்​கறிஞர்​கள் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் சங்க தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், அவரது தரப்பு வாதங்​களை எழுத்​துப்​பூர்​வ​மாக தாக்​கல் செய்​தார்.

பின்​னர், இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் கடந்த ஏப்​ரல் மாதம் நீதிபதி தள்​ளி​வைத்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் மனு​தா​ரர்​கள் அனை​வர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி நிர்​மல்​கு​மார் தீர்ப்பளித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து
மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: ஐகோர்ட் தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in