ஜெம் வீரமணி பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த சாந்தி-மகேந்திர சிம்கன் தம்பதியிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை

ஜெம் வீரமணி பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த சாந்தி-மகேந்திர சிம்கன் தம்பதியிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி பாலியல் லீலை களுக்கு உடந்​தை​யாக இருந்த சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்​திர சிம்​கனிடம் போலீ​ஸார் தங்​கள் காவலில் விடிய, விடிய விசா​ரணை நடத்​தினர்.

ஜெம் கிரானைட் வீரமணி​யின் பாலியல் குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பான விவ​காரத்​தில், அவரது உதவி​யாள​ரும் நெருங்​கிய தோழி​யு​மான சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்​திர சிம்​கன் ஆகியோர் உடந்​தை​யாக இருந்​த​தாக போலீ​ஸாரின் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. மேலும், அவர்​கள் இடைத்​தரகர்​களாக செயல்​பட்டு சிறுமிகளை வீரமணி​யிடம் அழைத்​துச் சென்​ற​தாக​வும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்​ததைத் தொடர்ந்​து, முதல் கட்​ட​மாக வீரமணி கைது செய்​யப்​பட்​டார். அவரை போலீ​ஸார் 3 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர்.

இதன் அடிப்​படை​யில், சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​கன் மற்​றும் மற்​றொரு உதவி​யாளர் கணேசன் ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். தற்​போது சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்​திர சிம்​கனை போலீ​ஸார் நேற்று முன்​தினம் முதல் 3 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

விசா​ரணை​யின்​போது, பல்​வேறு அதிர்ச்சி தகவல்​களை அவர்​கள் தெரி​வித்​தனர். குறிப்​பாக, சிறுமிகளை எவ்​வாறு நோட்​ட​மிடு​வது, பின்​னர் அவர்​களை எவ்​வாறு அணுகு​வது, தொடர்ந்து பாலியல் ரீதி​யாக பயன்​படுத்​திக் கொண்​ட​தாக கூறப்​படும் சம்​பவங்​கள் மற்​றும் தொழில் நண்​பர்​களு​டன் சிறுமிகளை தனிமை​யில் இருக்​கச் செய்து காரி​யம் சாதித்​ததாக கூறப்​படும் சம்​பவங்​கள் குறித்து அவர்​கள் தெரி​வித்​ததாக போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

மேலும், வீரமணி​யின் அந்​தரங்க நடவடிக்​கைகளை வீடியோவாக பதிவு செய்​து, அதை காண்​பித்து பணம் பறித்​த​தாக​வும், தொடர்ந்து பணம் பறிக்​கும் நோக்​கில் சில முக்​கிய பிர​முகர்​களை அணுகிய​தாக​வும் விசா​ரணை​யில் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளது. வீரமணி தொடர்​புடைய இடங்​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​களை காண்​பித்​தும் விசா​ரித்​துள்​ளனர். அதற்கு இரு​வரும் அளித்த பதில்​களை போலீ​ஸார் வீடியோ​வாக​வும், வாக்​குமூல​மாக​வும் பதிவு செய்​துள்​ளனர். இந்த வாக்​குமூலங்​களின் அடிப்​படை​யில் விசா​ரணையை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

​போலீ​ஸாரின் பிடி​யில் உள்ள சாந்தி சமூக வலை​தள​மான இன்​ஸ்டா பக்​கத்​தில் அவ்​வப்​போது வீடியோக்​களை வெளி​யிடும் பழக்​கத்தை வைத்​திருந்​துள்​ளார். எப்​போதெல்​லாம் அதீத மகிழ்ச்​சி​யில் திளைத்​துள்​ளாரோ அப்​போதெல்​லாம் பாடல்​களை இணைத்து ஒலிக்​கச் செய்து நடன​மாடி மகிழ்ந்​துள்​ளார். இப்​படி, ஒரு பட்​டாம்பூச்சி நெஞ்​சுக்​குள்ளே சுற்​றுகின்​றதே பாடல், சேட்​டன் வந்​தலே.. சேட்​டன் வந்​தலே.. என்ற பாடல், பட்​டத்து ராணி பார்க்​கும் பார்வை வெற்​றிக்​குத்​தான் என எண்ண வேண்​டும், என்​னென்​னவோ.. என்​நெஞ்​சிலே உள்பட 50-க்​கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு வித வித​மான உடைகளு​டன் நடன​மாடி உள்​ளார். இந்த பாடல்​கள்​ தற்​போது சமூக வலைதளங்​களில்​ வைரலாகி வருகிறது.

ஜெம் வீரமணி பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த சாந்தி-மகேந்திர சிம்கன் தம்பதியிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை
கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலையில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in