ஜெம் வீரமணி வழக்கு: பிரகாஷின் முன்ஜாமீன் மனு மீது போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜெம் வீரமணி வழக்கு: பிரகாஷின் முன்ஜாமீன் மனு மீது போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் தேடப்படும் கண்ணையா மகன் பிரகாஷுக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வீரமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்று, இந்த வழக்கை மூடி மறைக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதற்கு ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் உடந்தையாக செயல்பட்டதாகவும், இதற்காக பிரகாஷுக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீஸாரால் தேடப்படும் நபரான பிரகாஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவதால், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிரகாஷுக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பிரகாஷ் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நடந்தது. அப்போது பிரகாஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினமும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணியும் ஆஜராகினர். அதையடுத்து, பிரகாஷின் முன்ஜாமீன் மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.20-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு: பிரகாஷின் முன்ஜாமீன் மனு மீது போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் - விரைந்து நிரப்ப அன்புமணி வலியுறுத்தல்

X