அரசு சார்பில் ஆகாஷின் உடல் 100 நாட்களுக்கு பின்னர் தகனம்: போலீஸார் - உறவினர்கள் இடையே தள்ளுமுள்ளு

அரசு சார்பில் ஆகாஷின் உடல் 100 நாட்களுக்கு பின்னர் தகனம்: போலீஸார் - உறவினர்கள் இடையே தள்ளுமுள்ளு
Updated on
1 min read

மதுரை: மா​னாமதுரை​யில் போலீ​ஸார் விசா​ரணை​யில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் உடல், 100 நாட்​களுக்​குப் பின்​னர் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் இருந்து எடுத்​துச் செல்​லப்​பட்டு அரசு சார்​பில் மின் மயானத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது. இதில், போலீ​ஸாருக்​கும் ஆகாஷின் உறவினர்​களுக்​கும் இடையே ஏற்பட்ட தள்​ளு​முள்​ளு​வால் 50 பேரை போலீ​ஸார் கைது செய்தனர்.

மானாமதுரையைச் சேர்ந்த ராஜேஸ் கண்​ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (24). அப்​பகு​தியைச் சேர்ந்த 2 பேரை வெட்​டிய வழக்​கில், போலீ​ஸார் அவரைக் கைது செய்​தனர். பின்​னர், அவரை போலீ​ஸார் தாக்​கிய​தில், அவரது கால் எலும்பு முறிந்​த​தாகக் கூறி மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், அவர் கடந்த மார்ச் 8-ம் தேதி உயி​ரிழந்​தார். அவரது உடல் உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​வின்​படி உடற்கூ​ராய்வு செய்​யப்​பட்​டது.

இந்தச் சம்​பவத்​தில் கொலை வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்ட நிலையில், இதில் தொடர்​புடைய போலீ​ஸாரை கைதுசெய்ய வேண்​டும், உரிய இழப்​பீட்​டுத் தொகை வழங்க வேண்​டும், அப்​போது​தான் ஆகாஷ் உடலை பெற்​றுக் கொள்​வோம் என அவரது உறவினர்​கள் பல கட்​டப் போராட்​டம் நடத்​தினர். இதனால், 100 நாட்​களாக ஆகாஷ் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை பிணவறை​யில் வைக்​கப்​பட்​டிருந்​தது.

ஆகாஷ் குடும்​பத்​தினரின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்பட்ட பின்​னரும், அவரது உடலை பெறாமல் இருப்​பது ஏற்​புடையதல்ல. எனவே, ஜூன் 15-ம் தேதிக்​குள் அவரின் குடும்​பத்​தினர் உடலை பெற்​றுக் கொள்​ளா​விட்​டால், அரசு சார்​பில் அடக்​கம் அல்​லது தகனம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது.

அதன்​படி, ஆகாஷ் உடலை ஆர்​டிஓ கருணாகரனிடம், மதுரை அரசு மருத்​து​வ​மனை நிலைய மருத்​துவ அலு​வலர் சரவணன் ஒப்​படைத்​தார். இதனைத் தொடர்ந்​து, பலத்த பாது​காப்​புடன் ஆகாஷின் உடல் தகனம் செய்​வதற்​காக அரசு மருத்​து​வ​மனை​யில் இருந்து வெளியே கொண்டு வரப்​பட்​டது. அப்​போது அங்​கிருந்த உறவினர்​கள், உடலை வெளியே கொண்​டுவர எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதனால், அவர்​களுக்​கும் காவல்​ துறை​யினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதையடுத்​து, எதிர்ப்பு தெரி​வித்த சுமார் 50 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர், ஆகாஷின் உறவினர்​கள் முன்​னிலை​யில், மதுரை தத்​தனேரி மின் மயானத்​தில் ஆகாஷின் உடல் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது.

அரசு சார்பில் ஆகாஷின் உடல் 100 நாட்களுக்கு பின்னர் தகனம்: போலீஸார் - உறவினர்கள் இடையே தள்ளுமுள்ளு
பயிர்க் கடன்களை பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in