2025-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்தன: காவல் ஆணையர் தகவல்

2025-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்தன: காவல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

சென்னை: மாநகர காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்​டு​களில் தலா 105 கொலைகள் நடந்​துள்​ளன. 2025-ல் இது 93 ஆக குறைந்​துள்​ளது.

திடீரென உணர்ச்சி வசப்​படு​தல், தவறான உறவு, பணம் ஏமாற்​றியது, இடப்​பிரச்​சினை, மது​போதை​யில் சண்டை போன்ற காரணங்​களால் கொலைகள் நிகழ்ந்​துள்​ளன.

புதி​தாக தொடங்​கப்​பட்ட ஒருங்​கிணைந்த தொடர் நடவடிக்​கைகளால் ரவுடி கொலைகள் நடக்​காமல் தடுக்​கப்​பட்​டன. கடந்த 2 ஆண்​டு​களை ஒப்​பிடும்​போது, 2025-ம் ஆண்டு சென்னையில் வழிப்​பறி, திருட்​டு, செல்​போன் பறிப்பு சம்​பவங்​கள் மற்​றும் வாகன திருட்​டு​களும் வெகு​வாக குறைந்​துள்​ளன.

2023-ல் 325, 2024-ல் 256 வழிப்​பறி நடை​பெற்​றிருந்த நிலை​யில் 2025-ல் 180 வழிப்​பறி மட்​டுமே நிகழ்ந்​துள்​ளது. தொடர் குற்​றச்​செயலில் ஈடு​பட்​ட​தாக 2023-ல் 714 பேரும், 2024-ல் 1,302 பேரும் குண்​டர் தடுப்பு காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், 2025-ல் 540 ரவுடிகள், 125 திருட்டு வழக்கு குற்​ற​வாளி​கள், 348 போதைப்​பொருள் குற்​ற​வாளி​கள் உட்பட 1,092 பேர் குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

2025-ம் ஆண்டு 66 போக்சோ வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களுக்கு நீதி​மன்ற விசா​ரணை மூலம் கடும் தண்​டனை பெற்று தரப்​பட்​டுள்​ளது. பொது​மக்​களிட​மிருந்து 6,175 மனுக்​கள் பெறப்​பட்டு விசா​ரித்​து, அவற்​றில் 5,474 மனுக்​களுக்கு உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

2025-ல் சைபர் குற்​ற​வாளி​கள் 177 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் வங்கி கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டு, ரூ.34 கோடியே 74 லட்​சத்து 48,243 மீட்​கப்​பட்​டு, பாதிக்​கப்​பட்ட 1,389 பேருக்கு திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை போலீ​ஸாரின் திறன் மிகுந்த பணியே இதற்கு காரணம். இவ்​வாறு காவல் ஆணை​யர் அருண் தெரி​வித்​துள்​ளார்​.

2025-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்தன: காவல் ஆணையர் தகவல்
கோயம்பேட்டில் குவிந்த கரும்புகள்: ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in