சென்னையிலுள்ள 16 தொகுதிகளுக்கான 3 வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’  சீல் வைக்கப்பட்டு துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’  சீல் வைக்கப்பட்டு துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யிலுள்ள 16 தொகு​தி​களுக்​கான 3 வாக்கு எண்​ணும் மையங்​களி​லும் 4 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் நேரில் சென்று ஆய்வு செய்​தார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்குப்பதிவு நேற்று முன்​தினம் நடை​பெற்று முடிந்​தது. இதில் சென்னை காவல் எல்​லைக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் பதி​வான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் எடுத்​துச் செல்​லப்​பட்டு மெரி​னா​வில் உள்ள ராணிமேரி கல்​லூரி, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள லயோலா கல்​லூரி மற்​றும் கிண்​டி​யில் உள்ள அண்ணா பல்​கலைக்​கழகம் ஆகிய 3 வாக்கு எண்​ணும் மையங்​களில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த 3 மையங்​களி​லும் 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. முதல் அடுக்​கில் மத்​திய ஆயுத காவல் படை​யினரும், 2-வது அடுக்​கில் தமிழ்​நாடு சிறப்பு காவல் படை​யினரும், 3-வது அடுக்​கில் சென்னை பெருநகர ஆயுதப்​படை​யினரும், 4-வது அடுக்​கில் சென்னை காவல் சட்​டம் - ஒழுங்​கு, குற்​றப்​பிரிவு, போக்​கு​வரத்​து, சிறப்பு பிரிவு​களைச் சேர்ந்த போலீ​ஸாரும் நியமிக்​கப்​பட்டு 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் துப்​பாக்கி முனை​யில் கண்​காணித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், ராணி மேரி கல்​லூரி, அண்ணா பல்​கலைக்​கழகம் மற்​றும் லயோலா கல்​லூரி ஆகிய 3 வாக்கு எண்​ணும் மையங்​களுக்​கும் சென்னை காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் நேற்று முன்​தினம் இரவு நேரில் சென்று பாது​காப்பு பணி​களைப் பார்​வை​யிட்​டார். மேலும், அங்​குள்ள கட்​டமைப்​பு​களை​யும் ஆய்வு செய்​தார்.

அதைத்​தொடர்ந்​து, வாக்கு எண்​ணும் மையங்​களில் மேற்​கொள்ள வேண்​டிய வழி​காட்​டு​தல் நெறி​முறை​களைக் கடைபிடித்​து, பாது​காப்புப் பணி​யில் கவன​முடன் செயல்பட வேண்​டும் என போலீ​ஸாருக்​கு அவர்​ அறி​வுரை வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’&nbsp; சீல் வைக்கப்பட்டு துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in