அவதூறு வழக்குகளில் போலீஸார் பாரபட்சம்: சீமான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி

சீமான்

சீமான்

Updated on
1 min read

மதுரை: அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்​சகரு​மான பிஸ்​மி, தனி​யார் யூடியூப்​ சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்​டி​யில் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், திமுக தலை​வர் ஸ்டா​லினிடம் ரூ.100 கோடி பெற்​ற​தாக ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டை தெரி​வித்​துள்​ளார். தமிழன் கோகுல் தனது முகநூல் பக்​கத்​தில் மார்ஃபிங் செய்​யப்​பட்ட புகைப்​படங்​களை பதி​விட்​டு, சீமான் மீது தனி​நபர் தாக்​குதலை செய்கிறார்.

இவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, காவல் நிலை​யத்​தில் தொடர்ந்து புகார் அளித்​தும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, சீமான் மீது அவதூறு பரப்​பிய பிஸ்​மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்​குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி விசா​ரித்​தார். பின்​னர் நீதிப​தி, தேர்​தலில் வெற்​றி, தோல்வி சகஜம். சீமான் தவிர்க்க முடி​யாத தலை​வர்​களில் ஒரு​வர். முதல்​வர் விஜய்யை அவதூறாகப் பேசி​ய​தாக திமுக எம்​எல்​ஏவை போலீ​ஸார் உடனடி​யாக கைது செய்​தனர். ஆனால், சீமானை அவதூறாகப் பேசி​ய​வர்​கள் மீது இது​வரை நடவடிக்கை எடுக்​க​வில்லை என்​றார்.

மனு​தா​ரர் தரப்​பில், பழநி கோயில் நிலப் பதிவு தொடர்​பாக அறநிலை​யத் துறை அமைச்​சர் குறித்து வீடியோ வெளி​யிட்டநபர் மீது உடனடி​யாக நடவடிக்கை எடுத்​தனர். சீமானை அவதூறாகப் பேசுபவர்​கள் மீது நடவடிக்கை எடுப்​ப​தில்லை எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை நீதி​மன்​றம் வேடிக்கை பார்க்​காது. மதுரை சைபர் கிரைம் போலீ​ஸார், சீமான் தொடர்​பான மார்ஃபிங் புகைப்​படங்​களை உடனடி​யாக அகற்​ற​வும், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​ய​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். விசா​ரணை நாளைக்கு (இன்​றைக்​கு) தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.

<div class="paragraphs"><p>சீமான்</p></div>
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in