சேலத்தில் டிச. 29-ல் கூட்டணி குறித்து அறிவிப்பு: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்

ஜி.கே.மணி | கோப்புப்படம்
ஜி.கே.மணி | கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம்: பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சேலத்​தில் வரும் 29-ம் தேதி நடை​பெறும் பாமக செயற்​குழு, பொதுக்​குழுக் கூட்​டத்​தில், யாருடன் கூட்​டணி என்​பதை ராம​தாஸ் அறி​விப்​பார். அவரது தலை​மை​யில்​தான் பாமக செயல்​பட்டு வரு​கிறது.

அன்​புமணி மீதான முறை​கேடு புகார் குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தீர்​மான​ம் நிறைவேற்​றப்​பட​வில்​லை. தலை​வர் பதவி குறித்து தேர்​தல் ஆணை​யத்​துக்கு தவறான கடிதம் கொடுத்​தது குறித்து சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்​று​தான் கூறினோம். தேர்​தலில் போட்​டி​யிட அன்​புமணி விருப்​பமனு வாங்​கு​வது தவறு. இது தொடர்​பாக நீதி​மன்​றத்தை நாடு​வது குறித்து ராம​தாஸ் முடிவு செய்​வார். இவ்​வாறு ஜி.கே.மணி கூறி​னார். சேலம் எம்​எல்ஏ அருள் மற்​றும் நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்​.

ஜி.கே.மணி | கோப்புப்படம்
‘‘தமிழகத்தில் வேளாண்துறை வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது’’: அன்புமணி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in