

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை நேற்று ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் கன்னி
யாகுமரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடையும்போது கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.