“பழனிசாமி தலைமையில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” - பாஜக நிர்வாகிகளிடம் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on
2 min read

“தமிழகத்​தில் பழனி​சாமி தலை​மை​யில் இரட்டை இன்​ஜின் அரசு அமைய வேண்​டும். அப்​போது​தான் மாநிலத்​தின் வளர்ச்சி இரட்​டிப்​பாகும் என்​பதை மக்​களிடம் எடுத்​துச் சொல்ல வேண்​டும்” என்று பாஜக பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பிரதமர் மோடி வலி​யுறுத்​தி​னார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் வரும் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற உள்ள நிலை​யில், தமிழக அரசி​யல் களத்​தில் பிரச்​சா​ரம் அனல் பறக்​கிறது. கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கிடையே தொகு​திப் பங்​கீடு முடிந்​து, வேட்​பாளர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​வதற்​காகப் பிரதமர் நரேந்​திர மோடி தமிழகம் வரவுள்​ளார்.

பிரதமர் மோடி வரும் ஏப்​ரல் 15-ம் தேதி நாகர்​கோ​விலிலும், ஏப்​ரல் 18-ம் தேதி கோவை​யிலும் நடை​பெற உள்ள பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டங்​களில் பங்​கேற்று உரை​யாற்​றுகிறார். இந்​தப் பயணத்​தின் முன்​னோட்​ட​மாக, நேற்று மாலை 4 மணி​யள​வில் தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்​வாகி​களு​டன் பிரதமர் மோடி காணொலி வாயி​லாக விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: மத்​தி​யில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​த​போது திமுக அக்​கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்​தது. ஆனால், தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு அவர்​கள் எந்த உருப்​படி​யான திட்​டத்​தை​யும் கொண்டு வரவில்​லை. பாஜக ஆட்​சிக்கு வந்த பிறகு​தான் ரயில்வே திட்​டங்​கள், சாலை மேம்​பாடு எனப் பல்​வேறு மாற்​றங்​கள் நிகழ்ந்​துள்​ளன. குறிப்​பாக, தமிழகத்​திற்கு ஒரே நேரத்​தில் 11 மருத்​து​வக் கல்​லூரி​களைக் கொண்டு வந்​தது பாஜக அரசு​தான். பாம்​பன் பாலத்​தின் இன்​றைய நவீன மாற்​றமே அதற்கு சாட்​சி.

எனவே, தமிழகத்​தில் பழனி​சாமி தலை​மையி​லான இரட்டை இன்​ஜின் அரசு அமைய வேண்​டும். அப்​போது​தான் மாநிலத்​தின் வளர்ச்சி இரட்​டிப்​பாகும் என்​ப​தை​யும் மக்​களிடம் எடுத்​துச் சொல்ல வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். பிறகு கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​யைச் சேர்ந்த கட்சி நிர்​வாகி ரம்​யா​வுடன் கலந்​துரை​யாடிய பிரதமர் மோடி, “தமிழகத்​தில் பெண்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாக உள்​ளது. போதைப்​பொருள் மற்​றும் கள்​ளச்​சா​ராயப் புழக்​கம் அதி​கரித்​துள்​ளது. இது நேரடி​யாகக் குடும்​பங்​களைப் பாதிக்​கிறது. இதற்கு திமுக அரசு மறை​முக ஆதரவு அளித்து வரு​கிறது.

நம்​முடைய பெண் நிர்​வாகி​கள் வீடு வீடாகச் சென்று பெண்​களைச் சந்​திக்க வேண்​டும். பாஜக ஆளும் மாநிலங்​களில் பெண்​கள் எப்​படிப் பாது​காப்​பாக இருக்​கிறார்​கள், மத்​திய அரசின் திட்​டங்​களால் அவர்​கள் அடைந்த பயன்​கள் என்ன என்​ப​தைச் சமூக வலைத்​தளங்​கள் வாயி​லாக மக்​களிடம் கொண்டு சேர்க்க வேண்​டும்,” என வலி​யுறுத்​தி​னார்.

தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த சரவணனிடம் பேசிய பிரதமர், “தமிழகத்​தின் ஒவ்​வொரு அரசுத் துறை​யும் இன்று வசூல் வேட்​டைக்​கான கூடார​மாக மாறி​விட்​டது. திமுக அரசு ஊழலை ஒரு நிர்​வாக முறை​யாகவே மாற்​றி​விட்​டது. பல அமைச்​சர்​கள் ஊழல் வழக்​கு​களைச் சந்​தித்து வரு​கின்​றனர். ‘கமிஷன், கலெக்க் ஷன், கரப்​ஷன்’ என்​பதே இந்த அரசின் அடை​யாள​மாகி​விட்​டது. இதில் ஈடு​படு​பவர்​கள்​ ​யா​ராக இருந்​​தா​லும்​, தேசிய ஜன​நாயகக்​ கூட்​டணி ஆட்​சி அமைந்​த பிறகு அவர்​கள்​ மீது கடுமை​யான நடவடிக்​கை எடுக்​கப்​படும்​,” என எச்​சரிக்​கை விடுத்​தார்​.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி</p></div>
“மிசாவுக்கே பயப்படாதவன், அமித் ஷாவுக்கா பயப்படுவேன்?” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in