மதுரையில் மார்ச் 1 எய்மஸ் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்துவைக்கிறார்

தேஜ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்
மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்.

மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

மதுரை: மதுரையில் மார்ச் 1-ல் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் புதிய கட்​டிடத்தை திறந்​து​வைக்​கும் பிரதமர் மோடி, மத்​திய அரசின் பல்​வேறு திட்​டங்​களை​யும் தொடங்​கிவைக்​கிறார். மேலும், தேஜ கூட்டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தி​லும் அவர் பேசுகிறார்.

தேஜ கூட்டணி 2-வது தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் மதுரை மண்​டேலா நகரில் வரும் மார்ச் 1-ம் தேதி நடை​பெறுகிறது. அதே நாளில் தோப்​பூரில் கட்டி முடிக்​கப்​பட்​டுள்ள எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் புதிய கட்​டிடத் திறப்பு விழா​வும் நடை​பெற உள்​ளது.

எய்ம்ஸ் தொடக்க விழாவுக்கு மதுரை விமான நிலை​யம் அருகே முதலில் இடம் தேர்வு செய்​யப்​பட்​டது. பின்​னர், பிரதமர் பங்​கேற்​கும் அரசு விழா மற்​றும் அரசி​யல் விழாவை வெவ்​வேறு இடங்​களில் நடத்​து​வ​தால் பாது​காப்​புப் பிரச்​சினை ஏற்​படும் என்​ப​தால், இரு விழாவை​யும் ஒரே இடத்​தில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, அரசு விழா மற்​றும் பொதுக்​கூட்​டம் ஆகியவை ஒரே இடத்​தில் நடை​பெறுகின்​றன.

இந்த விழாக்​களுக்​காக மண்​டேலா நகரில் ஒரே இடத்​தில் இரு மேடைகள் அமைக்​கப்​படு​கின்​றன. முதலில் அரசு விழா​வில் பங்​கேற்​கும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்​து​வ​மனை புதிய கட்​டிடத்தை திறந்​து​வைப்​பதுடன், மத்​திய அரசின் பல்​வேறு திட்​டங்​களை​யும் தொடங்​கிவைக்​கிறார்.

தொடர்ந்​து, தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் நடை​பெறும் தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​றுப் பேசுகிறார். இதில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பேசுகின்​றனர்.

அரசு விழாவுக்​கான மேடை அமைக்​கும் பணி தொடர்​பாக மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​க​னுடன், மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அரவிந்த் ஆகியோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

மேடை அமைக்​கும் பணி, பார்​வை​யாளர்​கள் அமரும் இடம், பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து அப்​போது விவா​திக்​கப்​பட்​டது. பின்​னர், தேஜ கூட்டணி பொதுக்​கூட்​டம் நடை​பெறும் இடத்​தில் மேடை அமைக்​கும் பணியை மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் ஆய்வு செய்​தார்.

தொடர்ந்​து, கட்சி நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இதுகுறித்து பாஜக நிர்​வாகி​கள் கூறும்​போது, “தற்​போது விழா நடை​பெறும் இடத்​தில்​தான் 2019-ல் எய்ம்ஸ் அடிக்​கல் நாட்டு விழா​வும், அதி​முக-​பாஜக கூட்​டணி பொதுக்​கூட்​ட​மும் நடை​பெற்​றது.

இரு விழா​விலும் பிரதமர் மோடி பங்​கேற்​றார். தற்​போது நடை​பெறும் எய்ம்ஸ் திறப்பு விழா மற்​றும் அதி​முக-​பாஜக கூட்​டணி பொதுக்​கூட்​டத்​தி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார்” என்​றனர்.

<div class="paragraphs"><p>மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்.</p></div>
திண்டல் வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in