‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ - அண்ணாமலை

‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ - அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.

அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கடவுள் முருகனுக்கு கர்பூரம் ஏற்றி வழிபடுவது போல் வீடியோ ஒன்றையும் இணைந்துள்ளார் அண்ணாமலை.

முன்னதாக, திருப்​பரங்​குன்​றம் மலையில் தீபம் ஏற்​ற​க் கோரி வரும் 23-ம் தேதி மாலை இந்துக்கள் வீட்​டில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்​டும் என்று ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் வேண்​டு​கோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.த்

‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ - அண்ணாமலை
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in