எம்ஜிஆர் சொத்துக்கு உரிமை கோரிய ஜானகியின் மகன் மனு தள்ளுபடி: உரிமையியல் நீதிமன்றத்தை நாட அனுமதி

எம்ஜிஆர் சொத்துக்கு உரிமை கோரிய ஜானகியின் மகன் மனு தள்ளுபடி: உரிமையியல் நீதிமன்றத்தை நாட அனுமதி
Updated on: 
1 min read

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருக்கு சொந்​த​மான திருச்​சி​யில் உள்ள சொத்​துக்கு நிர்​வாக உரிமை கோரி வி.என்​.ஜானகி​யின் முதல் கணவரது மகன் சுரேந்​திரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி ஏ.டி.மரியா கிளேட் முன்​பாக நடந்​தது. அப்​போது சுரேந்​திரன் தரப்​பில், எம்ஜிஆர் தனது சொத்​துக்​கள் யார், யாருக்கு செல்ல வேண்​டும் என்​பது தொடர்​பாக கடந்த 1987-ம் ஆண்டு ஒரு உயில் எழுதி வைத்​தார்.

அந்த உயி​லில் திருச்​சி​யில் உள்ள சொத்து தொடர்​பாக எது​வும் குறிப்​பிடப்​பட​வில்​லை. அந்த சொத்தை இது​வரை யாருக்​கும் எழு​தி​யும் கொடுக்​க​வில்​லை.

எம்​ஜிஆரின் சுயசரிதை நூலான நான் ஏன் பிறந்​தேன் என்ற நூலின் காப்​புரிமை தொடர்​பான வழக்​கில் ஜானகி தான் எம்​ஜிஆரின் வாரிசு என நீதி​மன்​றம் ஏற்​கெனவே தீர்ப்​பளி்த்​துள்​ளது.

எனவே ஜானகி​யின் மகனான எனக்கு அந்த சொத்தை நி்ர்​வகிக்க உரிமை வழங்க வேண்​டும், என வாதிடப்​பட்​டது. பதி​லுக்கு எம்​ஜிஆரின் சகோ​தரர் சக்​கர​பாணி​யி்ன் வாரிசு​தா​ரர்​கள் தரப்​பில், ” திருச்​சி​யில் உள்ள எம்​ஜி ஆரின் சொத்​தில் தங்​களுக்​கும் உரிமை உள்​ள​தால் தங்​களை​யும் இந்த வழக்​கில் இணைத்து விசா​ரிக்க வேண்​டும்” என வாதிடப்​பட்​டது.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “எம்​ஜிஆரின் வாரிசு ஜானகி என்​ப​தற்​கான ஆதா​ரங்​களை மனு​தா​ரர் தாக்​கல் செய்​ய​வில்​லை. ஜானகி கடந்த 1996-ல் கால​மான நிலை​யில், 2019-ல் தான் இந்த வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே அந்த சொத்து யார் வசம் உள்​ளது என்​பது தொடர்​பாக​வும் மனு​தா​ரர் எந்த தகவலும் தெரி​வி்க்​க​வில்​லை” எனக்​கூறி மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளார். அதே​நேரம் மனு​தா​ரர் உரிய ஆவணங்​களு​டன் சம்​பந்​தப்​பட்ட உரிமை​யியல் நீதி​மன்​றத்தை நாடி பரி​காரம் தேடலாம், என அனு​ம​தி வழங்​கி உத்​தர​விட்​டுள்​ளார்​.

எம்ஜிஆர் சொத்துக்கு உரிமை கோரிய ஜானகியின் மகன் மனு தள்ளுபடி: உரிமையியல் நீதிமன்றத்தை நாட அனுமதி
ஊதிய உயர்வு வழங்காத மாநகராட்சி: கருப்பு உடையில் பணிக்கு வந்த அம்மா உணவக ஊழியர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in