வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் ரூ.100 கோடியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
வள்​ளலார் சத்​தி​ய​ஞான சபை

வள்​ளலார் சத்​தி​ய​ஞான சபை

Updated on
1 min read

சென்னை: கடலூர் மாவட்​டம் வடலூரில் உள்ள வள்​ளலார் சத்​தி​ய​ஞான சபை முன்​பாக சுமார் 71 ஏக்​கர் பரப்​பில் உள்ள பெரு​வெளி​யில் ரூ.100 கோடி செல​வில் வள்​ளலார் சர்​வ​தேச மையம் அமைக்க கடந்த திமுக ஆட்​சியில், 2023 அக்​.5-ம் தேதி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

இதற்​கான பூர்​வாங்​கப் பணி​கள் தொடங்​கிய நிலை​யில், பெரு​வெளி​யில் வள்​ளலார் சர்​வ​தேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்​தும், திட்​டத்​துக்கு ஆதர​வாக​வும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பல வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

அதே​போல, வள்​ளலார் சத்​தி​ய​ஞான சபை​யில் இருந்து ஒரு கி.மீ. தூரத்​தில் முதி​யோர் இல்​லம், சித்த மருத்​து​வ​மனை உள்​ளிட்ட கட்​டு​மானங்​களுக்​காக விவ​சாய விளைநிலங்​களை வகை மாற்​றம் செய்​ததை எதிர்த்​தும் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், தடை​யில்​லாச் சான்று பெறு​வ​தில் உள்ள விதி​மீறல்​களை சுட்​டிக்​காட்​டி, மறுஉத்​தரவு பிறப்​பிக்​கும் வரை வள்​ளலார் பெரு​வெளி​யில் சர்​வ​தேச மையம் தொடர்​பாக எந்த ஒரு கட்​டு​மானங்​களும் மேற்​கொள்​ளக் கூடாது என இடைக்​கால தடை விதித்​தனர்.

அதே​நேரம், வள்​ளலார் கோயி​லில் இருந்து ஒரு கி.மீ. தொலை​வில் உள்ள நிலத்தை வகை​மாற்​றம் செய்​வது தொடர்​பாக நகரமைப்பு இயக்​குநர் உரிய விதி​களை கடைபிடித்து ஒப்​புதல் வழங்​கி​யுள்​ள​தால், அங்கு கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​ளலாம் என்று அனு​மதி அளித்​தும் உத்​தர​விட்​டனர்.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், எஸ்​.சவுந்​தர் அமர்​வில் இந்த வழக்​கு​கள் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​. பரணிதரன், ‘‘வள்​ளலார் பெரு​வெளி​யில் ரூ.100 கோடி செல​வில் சர்​வ​தேச மையம் அமைக்​கும் திட்​டம் கைவிடப்​பட்​டு​விட்​டது. பெரு​வெளி​யில் வள்​ளலார் ஜோதி தரிசனத்​துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்​படுத்​தாத வகை​யில், மாற்று இடத்​தில் நூல​கம், கூட்​டரங்​கம், யோக​சாலை, முதி​யோர் இல்​லம் போன்​றவை கட்​டும் வகை​யில் விரை​வில் மாற்​றுத் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது'' என்றார்.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘வடலூரில் சர்​வ​தேச மையம் அமைப்​ப​தற்​காக பெரு​வெளி​யில் தோண்​டப்​பட்ட குழிகளை மூடி,பழைய நிலைக்கு கொண்​டுவர வேண்​டும். மாற்று இடத்​தில் நூல​கம், யோக​சாலை, முதி​யோர் இல்​லம் அமைப்​பது அரசின் முடிவுக்கு கட்​டுப்​பட்​டது. 71 ஏக்​கர் நிலத்தை சுற்​றி​லும் சுவர் எழுப்​பும் பணி​களை உடனே தொடங்​கலாம்’’ என்று அனு​மதி அளித்​து, வி​சா​ரணை​யை 4 வாரங்​களுக்​கு தள்​ளிவைத்​தனர்​.

<div class="paragraphs"><p>வள்​ளலார் சத்​தி​ய​ஞான சபை</p></div>
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in