மே தினம் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

மே தினம் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு ஏஐடி​யுசி பொதுச்​செய​லா​ளர் ம.இ​ரா​தாகிருஷ்ணன் மற்​றும் சிஐடியு பொதுச்​செய​லா​ளர் எஸ்​.கண்​ணன் ஆகியோர் தலைமை தேர்​தல் அதி​காரிக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் மே தினத்​தையொட்டி ஆண்​டு​தோறும் தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் காலை​யில் கொடியேற்​று​தல், மே தினப் பூங்​கா​வில் அஞ்​சலி செலுத்​துதல் மற்​றும் மாலை​யில் ஊர்​வலங்​கள், பொதுக்​கூட்​டங்​கள் நடத்​து​வது வழக்​கம்.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் தற்​போது வாக்​குப்​ப​திவு முடிந்​து​விட்ட போதி​லும், தேர்தல் நடத்தை நெறி​முறை​கள் அமலில் இருக்​கும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாக்​குப்​ப​திவுக்கு முன்​னும், பின்​னும் பல மதங்​களின் திரு​விழாக்​கள், சமூக அமைப்​பு​களின் செயல்​பாடு​கள் அனு​ம​திக்​கப்​படும் நிலை​யில், தொழிற்​சங்​கங்​களை மட்​டும் அரசி​யல் கட்​சிகளைப் போல அதி​காரி​கள் கருது​வது கவலை அளிக்​கிறது.

பிரச்சாரமாக பார்க்கக் கூடாது: தேர்​தல் காரணங்​களுக்​காக கொடிமரங்​கள் எல்​லாம் அகற்​றப்​பட்​டுள்​ளன. தேர்​தல் முடிந்​து​விட்ட சூழலில் மே தின கொண்​டாட்​டங்​களை ஒரு பிரச்​சா​ர​மாக பார்க்​கத் தேவை​யில்​லை. எனவே, தொழிலா​ளர்​கள் தங்​களது உரிமையை நிலை​நாட்டு வகை​யில், மே 1-ம் தேதி கொடிமரங்​களை நடவும், கொடியேற்​ற​வும், ஊர்​வலங்​கள், பொதுக்​கூட்​டங்​களை தொழிற்​சங்​கங்​கள் எவ்​வித தடை​யுமின்றி நடத்​த​வும் சம்​பந்தப்​பட்ட அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தல்​கள் வழங்க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

மே தினம் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்
அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in