

அண்ணா
சென்னை: அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா மதிமுக சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாளை மாலை நடைபெற இருக்கிறது. இதில், பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புறை ஆற்ற இருக்கிறார்.
இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாளை 15.09.2026 செவ்வாய்கிழமை மாலை 3 மணி அளவில் கழக அவைத் தலைவர் ஆட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறுகிறது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ நிறைவுப் பேருரை ஆற்றுகிறார். மலேசிய - பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புறை ஆற்றுகிறார்.
தொடர்ந்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொகையா, டாக்டர் சி.கிருஷ்ணன், புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன் எம்.சி., மற்றும் ஆடுதுறை முருகன் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி எம்.சி ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.