“பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

“பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
Updated on
1 min read

மத்​திய பட்​ஜெட்​டில் மாற்​றம் வரும் என்று எதிர்​பார்த்​தால் ஏமாற்​றம் தான் கிடைத்​துள்​ளது. இதற்​காக பாஜக​வுக்கு மக்​கள் தேர்​தலில் பாடம் புகட்​டு​வார்​கள் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரிவித்​தார்.

சிஎம்​டிஏ சார்​பில், கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட அகரம், ஜெக​நாதன் தெரு​வில் ரூ.11.74 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள ரத்த சுத்​தி​கரிப்பு நிலை​யம் மற்​றும் மறு​வாழ்வு மையம் மற்​றும் அவ்​வளாகத்​தில் 6 நியாய விலைக் கடைகள், கொளத்​தூர், ரெட்​டேரி சந்​திப்பு அரு​கில் ரூ.4.98 கோடி செல​வில் மேம்​படுத்​தப்​பட்​டுள்ள கொளத்​தூர் ஏரிக்​கரை பூங்​காவை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

அத்​துடன்​,ரூ.39 கோடி மதிப்​பீட்​டில் 310 திறந்​தவெளி மின்​மாற்றி கட்​டமைப்​பு​களை, பாதுக்​காப்​பான வளைதள மின்​மாற்​றிகளாக மாற்றி அமைக்​கும் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இதுத​விர, ஜவகர் நகரில் உள்ள கொளத்​தூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வலக வளாகத்​தில் பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவ, மாணவி​களுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரண பொருட்​கள், மடிக்​கணினிகள், பயனாளி​களுக்கு திருமண உதவித்​தொகை, மாவு அரவை இயந்​திரங்​கள், சலவை பெட்​டிகள், காதொலி கருவி​கள் உள்​ளிட்ட பல்​வேறு நலத்​திட்ட உதவி​களை 248 பயனாளி​களுக்கு வழங்​கி​னார்.

அப்​போது முதல்​வர் செய்​தி​யாளர்​களின் கேள்வி​களுக்கு பதிலளித்​த​தாவது:

Q

மத்​திய பட்​ஜெட்​டில் தமி​ழ​கத்​துக்கு எதிர்​பார்த்த முக்​கிய அறி​விப்​பு​கள் வரவில்​லை​யே?

A

மத்​திய பட்​ஜெட்​டில் வெறும் ஏமாற்​றம்​தான். மாற்​றம் வரும் என எதிர்​பார்த்த நிலை​யில், ஏமாற்​றம்​தான் கிடைத்​துள்​ளது. தமிழக மக்​களுக்​கும் ஏமாற்​றம்​தான் கிடைத்​துள்​ளது.

Q

இது தேர்​தல் ஆண்​டு. இருந்​தா​லும் பட்​ஜெட்​டில் திட்​டங்​கள் இல்​லை​யே?

A

இதற்கு மக்​கள் வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக​வுக்கு தக்க பாடம் புகட்டுவார்​கள்.

Q

கூட்​டணி பேச்​சு​வார்த்​தைகள் எப்​போது தொடங்​கப்​படும்?

A

விரை​வில் தொடங்​கு​வோம்.

Q

கூட்​டணி கட்​சிகளு​டன் பேச குழு எப்​போது அமைக்​கப்​படும்?

A

விரை​வில் குழு அமைக்​கப்​படும்.

Q

அரசி​யலில் புதிய எதிரி​களுக்கு என்ன சொல்ல விரும்​பு​கிறீர்​கள்?

A

நான் யாரை​யும் எதிரி​யாகப் பார்ப்​ப​தில்​லை.

Q

இருந்​தா​லும், திமுகவை தொடர்ந்து விமர்​சிக்​கி​றார்​களே?

A

அவர்​களை​யும் நண்​பர்​களாகப் பார்க்​கிறேன். மரி​யாதை கொடுக்​கிறேன்.

இவ்​வாறு அவர் பதிலளித்​தார்​. நிகழ்​வின் போது, அமைச்​சர்​கள் கே.ஆர்​.பெரியகருப்​பன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர்​.ஆர்​.பிரியா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

“பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
“தவெக சார்பில் 6-ம் தேதி முதல் விருப்ப மனு” - பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in